அடை தோசை மாவில் கார போண்டா(kara bonda recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#winter
கார தோசைக்கு ஆட்டும் மாவில் தனியாக உளுந்து ஊற வைத்து மாவாக ஆட்டி எடுத்து கலந்து இந்த வகை கச்சாயம் அல்லது பொண்டாவை சுடலாம். மழை காலத்திற்கும், குளிர்காலத்திற்கு சுடசுட மாலையில் சாப்பிட ஏற்ற snacks ஆகும்.நீங்கள் கார தோசைக்கு ஆட்டும் நாளன்று சிறிது உளுந்து ஊற வைத்து தனியாக ஆட்டி இதுபோல் போண்டா செய்யலாம். இதற்கென்று ஆட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.கார தோசை மாவில் கொஞ்சம் எடுத்து போண்டா செய்து விட்டு மீதி மாவை அடுத்த நாள் தோசையாக ஊற்றி கொள்ளலாம்.நான் இன்று நான்கு டம்ளர் அரிசி பிளஸ் ஒரு டம்ளர் பச்சை அரிசி அதற்கேற்ற துவரம்பருப்பு சேர்த்து ஆட்டி செய்தேன் கொஞ்சம் மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை தோசையை ஊற்ற எடுத்து வைத்துக் கொண்டேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 +45mns
25 number
  1. 2 டம்ளர்இட்லி அரிசி
  2. 1/2டம்ளர் பச்சை அரிசி
  3. 1 கப் துவரம் பருப்பு அல்லது கொஞ்சம் குறைவாக
  4. 6வர மிளகாய்
  5. 4 பச்சை மிளகாய்
  6. 20சிறிய வெங்காயம் அல்லது ஒரு கப் அளவிற்கு வெங்காயம்
  7. ஒரு கைப்பிடிகறிவேப்பிலை
  8. ஒரு கைப்பிடிகொத்தமல்லித்தழை
  9. தேவையான அளவுஉப்பு
  10. ஒரு கப் அளவிற்கு ஆட்டிய உளுந்து மாவு

சமையல் குறிப்புகள்

4 +45mns
  1. 1

    முதலில் புழுங்கல் அரிசி பச்சை அரிசி துவரம் பருப்பு பச்சை மிளகாய் வரமிளகாய் நான்கையும் ஒன்றாக சேர்த்து நன்கு கழுவி நான்கு மணி நேரம் வரை ஒன்றாக ஊறவைக்கவும்.பிறகு தண்ணீர் வடித்து விட்டு மிளகாயை மட்டும் எடுத்து ஒரு சுற்று ஓட விடவும்.பிறகு அரிசி பருப்பு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.மாவு வலிக்கும் சமயத்தில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் ஓட வைத்து மாவை வழித்து எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    20 சின்ன வெங்காயம் அரை தோலுரித்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து அடை மாவுடன் கலந்து கொள்ளவும்.

  3. 3

    வழித்து எடுத்து மாவுடன் ஆட்டிய உளுந்து மாவை சேர்த்து கலந்து கொள்ளவும் கரண்டியில் அள்ளி எண்ணெயில் ஊற்றும் பதத்திற்கு அரைக்கவும். தேவை என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவு கலக்கும் போது உளுந்து எவ்வளவு தேவை என்று தெரியும். அதிக உளுந்து சேர்த்தாலும் எண்ணெய் இழுக்கும் குறைவான உளுந்து சேர்த்தால் கார கச்சாயம் போண்டா கெட்டியாக இருக்கும். ஆகையால் உளுந்து மாவு சேர்த்து கலக்கும்போது பதம் பார்த்துக் கொள்ளவும்.

  4. 4

    இப்போது வாணலியில் எண்ணெய் தேவையான அளவு சேர்த்து காய்ந்த உடன் கரண்டியில் இந்த கசாய மாவை அள்ளி ஒன்று ஒன்றாக ஊற்றவும். நன்கு உப்பி மேலெழும்பி வரும் பொழுது திருப்பி போடவும். கரண்டி கொண்டு எல்லா புறமும் சிவக்க விட்டு அரி கரண்டியில் எண்ணெய் வடித்து எடுக்கவும்

  5. 5

    சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி. காரம் கூட அல்லது குறைவாக அவரவர் தேவைக்கேற்ப மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த குளிர்காலத்தில் மாலை நேரம் டீ அல்லது காபி ஏற்ற சரியான ஜோடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes