இட்லி (Soft healthy idli recipe in tamil)

எப்போதும் போல் இட்லிக்கு அரிசி ஊற வைத்தேன்.. வீட்டில் எல்லா சிறு தானிய வகைகளும் தீர்ந்த பிறகு ஒரு டம்ளர் சாமை அரிசி மிச்சமிருந்தது. அரிசிக்கு ஊறவைத்த பிறகு சாமை ஒரு டம்ளர் சேர்த்து ஊற வைத்தேன். எப்போதும் சேர்க்கும உளுந்து அளவுடன் ஒரு கைப்பிடி அளவு ஒரு டம்ளர் சாமைக்கும் சேர்த்து ஊற வைத்தேன். இட்லி மாவை கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொண்டேன். இட்லி மாவு புளித்த பிறகு காலையில் இட்லி ஊற்றினேன். ட மிகவும் மிருதுவாகவும் அதேசமயம் நாம் தினமும் செய்யும் இட்லியை விட டேஸ்ட் வித்தியாசமாகவும் இருந்தது. இப்படி கூட வேறு சிறுதானியங்களை சேர்த்து செய்யலாம்..முழுதும் சிறுதானியங்களில் இட்லி செய்தால் பிடிக்காத குழந்தைகள் ,வீட்டில் பெரியவர் சிலரும் இருப்பர் அவர்களுக்கு இது போல் சேர்த்து செய்து கொடுக்கலாம். வித்தியாசம் தெரியாது சுவையும் நன்றாக இருப்பதால் விரும்பி சாப்பிடுவர்.
இட்லி (Soft healthy idli recipe in tamil)
எப்போதும் போல் இட்லிக்கு அரிசி ஊற வைத்தேன்.. வீட்டில் எல்லா சிறு தானிய வகைகளும் தீர்ந்த பிறகு ஒரு டம்ளர் சாமை அரிசி மிச்சமிருந்தது. அரிசிக்கு ஊறவைத்த பிறகு சாமை ஒரு டம்ளர் சேர்த்து ஊற வைத்தேன். எப்போதும் சேர்க்கும உளுந்து அளவுடன் ஒரு கைப்பிடி அளவு ஒரு டம்ளர் சாமைக்கும் சேர்த்து ஊற வைத்தேன். இட்லி மாவை கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொண்டேன். இட்லி மாவு புளித்த பிறகு காலையில் இட்லி ஊற்றினேன். ட மிகவும் மிருதுவாகவும் அதேசமயம் நாம் தினமும் செய்யும் இட்லியை விட டேஸ்ட் வித்தியாசமாகவும் இருந்தது. இப்படி கூட வேறு சிறுதானியங்களை சேர்த்து செய்யலாம்..முழுதும் சிறுதானியங்களில் இட்லி செய்தால் பிடிக்காத குழந்தைகள் ,வீட்டில் பெரியவர் சிலரும் இருப்பர் அவர்களுக்கு இது போல் சேர்த்து செய்து கொடுக்கலாம். வித்தியாசம் தெரியாது சுவையும் நன்றாக இருப்பதால் விரும்பி சாப்பிடுவர்.
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியையும் சாமை அரிசியையும் தண்ணீர் சேர்த்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.ஆறு மணி நேரத்திலிருந்து 8 மணி நேரம் வரை ஊற வைக்கலாம். உளுத்தம்பருப்பை அரைப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு கழுவி வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
முதலில் உளுந்தை கிரைண்டரில் பொங்க ஆட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு இட்லி அரிசி கிரைண்டரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வழிப்பதர்க்கு 5 நிமிடம் முன்பே உப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மாவை வழித்து உளுந்து வழித்த பாத்திரத்தில் சேர்த்து கிரைண்டரை கழுவி தேவையான அளவு இந்த தண்ணீர் சேர்த்து இட்லி ஊற்றும் பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு மாவை வெளியில் வைத்து புளிக்க வைத்து கொள்ளவும். எட்டிலிருந்து பத்து மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
- 3
மீதி மாவை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு தேவையான போது வெளியில் எடுத்து வைத்து புளிக்க வைத்து மீண்டும் இட்லி அல்லது தோசை ஊற்றி கொள்ளலாம்.மறுநாள் காலை இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இட்லி மாவை கரண்டி கொண்டு நன்றாக ஒருமுறை கலந்து இட்லி தட்டில் அளவாக ஊற்றி 7 நிமிடம் வரை வேக விடவும். இட்லி வெந்து விட்டதா என்று பார்த்துவிட்டு இட்லியை ஹாட் பேக்கில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
இந்த இட்லிக்கு ஏதாவது ஒரு புளி சட்னி கிரீன் சட்னி மிளகாய் சட்னி சாம்பார் எது வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். ஆரோக்கியமும் கிடைக்கும் அதே சமயம் சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த இட்லி சாப்பிடுவார்கள். நான் இன்று இந்த இட்லிக்கு பாசி பருப்பு தக்காளி சாம்பார் செய்தேன். சூடான இட்லி மேல் சாம்பார் ஊற்றி நெய் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது. நான் மேற்கொண்ட இந்த முயற்சி நன்றாக அமைந்தது. பகலில் பஞ்சு போல் இருந்தது.
Similar Recipes
-
சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
இட்லி அரிசி ஒரு டம்ளர். சாமை அரிசி ஒரு டம்ளர். உளுந்து முக்கால் டம்ளர். அரிசி சாமை கலந்து ஊறவைத்து அரைக்கவும். உளுந்து தனியாக அரைக்கவும். உப்பு போட்டு இரண்டு மாவையும் பிசைந்து வைத்து மறுநாள் இட்லி ஊற்றவும்.தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி ஒSubbulakshmi -
அரிசி சேர்க்காத சிறுதானிய இட்லி(millets idli recipe in tamil)
சர்க்கரை நோய்க்கு அரிசி வேண்டாம் என்று சொல்கிறார்கள் ஆனால் நாம் அன்றாடம் செய்யும் இட்லியில் அரிசியும் உளுந்தும் தான் சேர்த்து செய்கிறோம் ஆனால் சிறு தானியங்களை சேர்த்து நான் செய்த இந்த இட்லியில் அரிசி சேர்க்கவில்லை அதற்கு பதில் கருப்பு கவுனி அரிசி சேர்த்துள்ளேன். கருப்பு கவுனி அரிசி இல்லை என்றால் வேறு ஏதாவது ஒரு சிறு தானியம் கூட சேர்த்து செய்யலாம்.. மொத்தம் ஐந்து அளவு சிறுதானியங்கள் ஒரு அளவு உளுந்து. கம்பு அல்லது கேழ்வரகு கூட சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். 5:1 என்ற விகித்தில் எடுத்துக் கொள்ளவும். Meena Ramesh -
ராகி இட்லி 2(ragi idli recipe in tamil)
ராகி இட்லி அரிசியுடன் சேர்த்து செய்தது.இதற்கு முன்னால் அறிசியே சேர்க்காமல் செய்தேன். Meena Ramesh -
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh -
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
சிறு தானிய இட்லி
#veg உடம்புக்கு ரொம்ப நல்லது. சுகர் இருப்பவர்கள் அரிசிக்கு பதிலாக சிறு தானிய இட்லி செய்து சாப்பிடலாம். சுகர் கட்டுக்குள் இருக்கும். Shanthi -
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh -
மண் மணக்கும் மதுரை மல்லிகை பூ இட்லி (Madurai mallikaipoo idli recipe in tamil)
#steam இட்லிக்கு உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தால் இட்லி மிருதுவாக இருக்கும் சத்யாகுமார் -
இட்லி மசாலா(Idli masala recipe in tamil)
#npd2 காலையில் செய்த இட்லியை வைத்து சுவையான ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி இட்லி மசாலா.manu
-
குதிரை வாலி சாஃப்ட் இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
#சிறுதானிய உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது எடை குறைப்பு சர்க்கரை நோய் போன்ற தேவைகளுக்கு இது போன்ற சிறுதானிய உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். அரிசியில் செய்யும் இட்லியை விட சுவையும் ,மிருதுத் தன்மையும் அதிகமாக இருந்தது... உடல் நலம் பேணுவோம் இதை கட்டாயம் செய்து பார்க்கலாம். Meena Ramesh -
இட்லி மிளகாய்ப்பொடி(Protein riched idli milakaai podi recipe in tamil)
#wt1இதில் புரதச்சத்து அதிகம் மிகுந்த பருப்பு வகைகளை சேர்த்துள்ளேன்.வழக்கமாக செய்யும் மிளகாய் பொடியை விட இந்த இட்லி மிளகாய்ப்பொடி மிகவும் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒருமுறை நீங்களும் செய்து பாருங்கள்.இந்தக் குளிர் காலத்திற்கு சூடாக்கி ஊற்றி இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து இட்லியுடன் தொட்டு சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும். Meena Ramesh -
மினி சாம்பார் இட்லி (MIni sambar idli recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஹோட்டல் போனதும் கேட்டு வாங்கி சாப்பிடுவது மினி இட்லி சாம்பார் #hotel Sundari Mani -
கறுப்பு கவுனி தோசை (Karuppu kavuni arisi dosai recipe in tamil)
#GA4#Week19Black riceஇந்த கறுப்பு கவுனி அரிசி மிகவும் உடலுக்கு நல்லது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த அரிசி. அந்த காலத்தில் அரசர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள். கை, கால் வலிக்கு சிறந்த அரிசி. எங்கள் வீட்டில் daily இந்த கறுப்பு கவுனி அரிசி தோசை, இட்லி சாப்பிடுகிறோம். Sundari Mani -
-
பீட்ரூட் இட்லி (Beetroot idli Recipe in Tamil)
#nutrient3#bookபீட்ரூட்டில் பைபர் அயன் விட்டமின் b9 மெக்னீசியம் பொட்டாசியம் விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது Jassi Aarif -
மல்டி கிரைன்ஸ் இட்லி(பல தானிய இட்லி)
#இட்லி #bookஎன் தோழி எனக்கு கொடுத்த பல தானிய மாவிலிருந்து இதை நான் செய்தேன். நன்றி தோழி. சத்து மாவுடன் முன்னரே ஊற வைத்த உளுந்து வெந்தயத்தை சேர்த்து ஆட்டி , இட்லி பதத்திற்கு கரைத்து கொண்டேன். உங்களிடம் சத்து மாவு இல்லை என்றால் அரைத்து வைத்து கொண்டால் இது போல இட்லி தோசை போன்றவை செய்யலாம். மற்றும் கஞ்சி காய்ச்சி பால் அல்லது மோருடன் கலந்து குடிக்கலாம். வரமாவாக அரைத்து வைத்து கொள்ள முடியாதவர்கள் எல்லா தானியங்களையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொண்டு எட்டு மணி நேரம் புளிக்க வைத்து இட்லி தயாரித்தும் கொள்ளலாம். கிழே தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளையும் தருகிறேன். அவரவர் தேவைக்கேற்ப தயார் செய்து கொள்ளவும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சரியான உணவு. மற்றும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களும் இதை வழக்கமாக்கி கொள்ளலாம்.குழந்தைகளுக்கும் சிறு வயதில் இருந்தே நல்ல உணவு பழக்கத்தை கற்று கொடுக்கலாம். Meena Ramesh -
-
* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)
#queen1இந்த இட்லி காஞ்சீபுரத்தில் மிகவும் பிரபலமானது.இதனை,* குடலை இட்லி* என்றும் கூறுவார்கள்.இது இட்லி போல் இல்லாமல், குழாய் புட்டை போல்இருக்கும்.மேலும் கோவில் கோபுரம் போல் உள்ளதால், கோபுர இட்லி என்றும் சொல்வார்கள்.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
குதிரை வாலி இட்லி (Kuthiraivaali idli recipe in tamil)
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த சிறு தானிய உணவுகளில் ஒன்று.)#evening 3 Sree Devi Govindarajan -
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும் சத்யாகுமார் -
-
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam"கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இப்படி ஒரு பழமொழி உண்டு வெயிட் குறைக்க கொள்ளு ரொம்ப ஹெல்ப் பண்ணனும் கொள்ளு இட்லி எப்படி செய்றதுனு பார்க்கலாம் jassi Aarif -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
மிருதுவான இட்லிக்கு மாவு அரைக்கும் முறை (Idli maavu recipe in tamil)
டிப்ஸ்:# மாவு அரைக்க ஐஸ் வாட்டரை பயன்படுத்தவும். இதனால் மாவின் உபரி அதிகம் கிடைக்கும். மேலும் இட்லி தோசை இரண்டும் சாப்டாக இருக்கும்.# இட்லி அரிசியும் பச்சரிசியும் சரி சம அளவு சேர்க்க வேண்டும் என்பது இல்லை. இட்லி அரிசியை அதிகாகவும் பச்சரிசி குறைவாகவும் சேர்க்கலாம். ரேஷன் அரிசியும் பயன்படுத்தலாம்.#சோடா பயன்படுத்த கூடாது.# உளுந்தை ஊற வைக்கும் போது பிரிஜ்ஜில் வைத்து ஊற விடலாம். அல்லது தோல் உளுந்து பயன் படுத்துபவர் ஐஸ் வாட்டரை பயன் படுத்தலாம்.#புதிய உளுந்தாக இருந்தால் மாவு அதிகம் வரும். பழைய உளுந்து பயன் படுத்தினால் அளவு சற்று அதிகம் தேவைப்படும்.#மாவு அரைத்த பின்னர் இரண்டு வேறு வேறு பாத்திரத்தில் பிரித்து வைத்து பயன் படுத்தினால் அதிக நாட்கள் மாவு நன்றாக இருக்கும்.#இட்லி தோசை ஊற்றிய பின்னர் மீதம் உள்ள மாவில் கரண்டி போட்டு மூடி வைக்க கூடாது. கரண்டியுடன் மாவை பிரிஜ்ஜில் வைத்தாலும் மாவு நீர்த்து புளித்து விடும்.# அவல் (poha) இல்லை எனில் சவ்வரிசி பயன் படுத்தலாம். ஆனால் சவ்வரிசி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.# மாவை அரைத்து கலக்கும் போது அதிகம் கெட்டியாகவும் அல்லது அதிக தண்ணீராகவும் இல்லாமல் பார்த்து கொள்ளவும். அதிகம் கெட்டியாக தெரிந்தால் கிரைண்டர் கழுவிய தண்ணீரை சிறிது சேர்த்து கொள்ளலாம்.#சிலர் மாவை கையினால் கரைத்தால் அதிகம் புளித்து விடும். அவர்கள் கரண்டியை பயன்படுத்தி கரைக்கலாம். Manjula Sivakumar -
சாமை வெண்பொங்கல்(samai venpongal recipe in tamil)
#CF3 சாமை வெண்பொங்கல் உடலுக்கு ஆரோக்கியமான ரெசிபி Siva Sankari -
பஞசு போன்ற மல்லிகைபூ இட்லி
#compo 1 👌 மல்லிகை பூ இட்லிபஞசு போல் செய்ய இட்லி அரிசி பச்சரிசி கலந்து கழுவி சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் 👌 இரண்டாவது உழுந்து வெந்தயம் இரண்டையும சுத்தம் செய்து கொள்ள வேண்டும் பிறகு அதை கழுவி நான்குமணி நேரம் ஊற வைக்கவேண்டும் முதலில் உழுந்து வெந்தயம் சேர்த்து ஆட்டி எடுத்துசிறிது தண்ணீரில் போட்டு பார்க்கும் போது பஞ்சு போல் மிதக்க வேண்டும் அதுதான் உழுந்து மாவு பக்குவம் பிறகு அரிசி லேசான கொர கொரப்பாக அரைத்து இரண்டையும் உப்பு போட்டு நன்கு கீழ் இருந்து மேல் நோக்கி. இட்லி ஊற்றும் பக்குவத்திற்கு நன்கு கலந்து இரவு முழுவதும் அப்படியே வைத்து மாவு புளித்தவுடன் காலை மாவை கலக்காமல. இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் இட்லி ஊற்றி வேக வைத்து எடுக்கும் போது பஞ்சு போன்ற மல்லிகை பூ 💐இட்லி சூப்பர் 👌👌👌👌 Kalavathi Jayabal
More Recipes
கமெண்ட்