திருநெல்வேலி அல்வா (thirunelveli halwa recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#m2021 இந்த ரெசிபி நான் முதன்முறையாக செய்யும்போதே எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது அது மறக்க முடியாத ஒன்று.. இந்த அல்வா திருநெல்வேலி இருட்டுக் கடையில் சுடச்சுட வாழை இலையில் வைத்து சாப்பிட தருவார்கள் சாப்பிடும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்...

திருநெல்வேலி அல்வா (thirunelveli halwa recipe in tamil)

#m2021 இந்த ரெசிபி நான் முதன்முறையாக செய்யும்போதே எனது குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது அது மறக்க முடியாத ஒன்று.. இந்த அல்வா திருநெல்வேலி இருட்டுக் கடையில் சுடச்சுட வாழை இலையில் வைத்து சாப்பிட தருவார்கள் சாப்பிடும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

90நிமிடங்கள்
4நபர்கள்
  1. 2கப் கோதுமை மாவு
  2. 2-1/2கப் சர்க்கரை
  3. 5கப் தண்ணீர்
  4. 1ஸ்பூன் ஏலக்காய் தூள்
  5. 1கப் நெய்
  6. தேவையானஅளவு முந்திரி

சமையல் குறிப்புகள்

90நிமிடங்கள்
  1. 1

    முதலில் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  2. 2

    அதில் நான்கு கப் தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் நன்றாக ஊறவிடவும்... ஊறியதும் அதை கரைத்தால் பால் தனியாக சக்கை தனியாக வந்துவிடும்

  3. 3

    அதை நன்றாக வடிகட்டி 4 லிருந்து 5 மணி நேரம் அப்படியே விடவும்.. 5 மணி நேரம் கழித்து பார்த்தால் பால் அடியில் தங்கிவிடும் தண்ணீர் மேலே நிற்கும் அந்த நீரை வடித்து விடலாம்

  4. 4

    இப்போது பாலை நன்றாக கலந்து அதில் ஒரு கப் தண்ணீர் விட்டு கடாயில் ஊற்றி நன்றாக காய்ச்சவும்..

  5. 5

    பால் சிறிது நேரத்தில் கெட்டியாக ஆரம்பிக்கும் போது சர்க்கரையை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்...

  6. 6

    திருநெல்வேலி அல்வா சற்று நிறம் பிரவுன் கலரில் இருக்கும்... அதற்காக நாம் எந்த ஃபுட் கலரும் சேர்க்கத் தேவையில்லை... மீதமுள்ள அரை கப் சர்க்கரையை கடாயில் போட்டு கேரமல் ஆக செய்து அதை அல்வாவில் ஊற்றவும்

  7. 7

    அதை நன்றாக கிளறி கெட்டியாகும் போது இடைவெளிவிட்டு சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி கைவிடாமல் கிளறவும்

  8. 8

    கெட்டியாகும் போது நிறம் இன்னும் நன்றாக மாறும் அப்போதும் அடிக்கடி நெய் விட்டுக் கொண்டே இருக்கவும்

  9. 9

    இறுதியாக நாம் விட்ட நெய் வெளியே பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விட்டு முந்திரியை வறுத்து அதில் சேர்க்கவும் அதனுடன் ஏலக்காய் தூளையும் சேர்க்கவும்... பாரம்பரியமான திருநெல்வேலி அல்வாவில் ஏலக்காய் தூள் சேர்க்க மாட்டார்கள் ஆனால் நான் சிறிது மணத்திற்காக சேர்த்துள்ளேன்...

  10. 10

    இப்போது சூடான சுவையான திருநெல்வேலி அல்வா தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes