*முள்ளங்கி, தக்காளி சூப்*(mullangi tomato soup recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#Wt1 வெள்ளை முள்ளங்கி உடலுக்கு மிகவும் தல்லது.இந்த குளிர் காலத்திற்கு பல வகையான சூப்கள் செய்து குடிக்கலாம்.அவை உடலுக்கு சுறுசுறுப்பையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.மிளகு தூள் சேர்ப்பதால் கூடுதல் எனர்ஜி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பேர்
  1. 1வெள்ளை முள்ளங்கி
  2. 1தக்காளி
  3. 1/2 டேபிள் ஸ்பூன்சோள மாவு
  4. ருசிக்குஉப்பு
  5. 2 ஸ்பூன்மிளகு தூள்
  6. 2 ஸ்பூன்உருக்கிய நெய்
  7. 1 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி தழை
  8. 2 கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முள்ளங்கி, தக்காளியை நறுக்கவும்.சிறிய பேனில் நறுக்கின முள்ளங்கி, தக்காளி, உப்பு,மிளகு தூள் போடவும்.

  2. 2

    பேனை மூடி அடுப்பை சிறியதில் வைத்து வேக விடவும்.வெந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு ஆறவிடவும்.

  3. 3

    வேகவைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.வெந்த காய்கறியை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து பேனில் ஊற்றி கொதிக்க விடவும்.

  4. 4

    சோள மாவை தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.மிளகு தூள் சிறிது போடவும்.பிறகு சிறிது நெய் விடவும்.

  5. 5

    பின் அடுப்பை நிறுத்தி விட்டு மேலே கொத்தமல்லி தழை, நெய் விட்டு சுடசுட பரிமாறவும்.இப்போது குளிருக்கு ஏற்ற,* முள்ளங்கி, தக்காளி சூப்* தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes