பிஸ்தா பவுண்ட் கேக்(pista pound cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக்க கொள்ளவும்.
பிஸ்தாவை மிக்ஸி ஜாரில் சேர்த்து,2-3பல்ஸ் விட்டு,கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.சிறிதளவு பிஸ்தா நறுக்கி வைக்கவும்..
- 2
1/2கப் காய்ச்சி ஆறிய பாலில் 1சொட்டு பச்சை புட் கலர் சேர்த்து கலக்கவும்.
நான் அடர் பச்சை கலர் சேர்த்துள்ளேன். வெளிர் பச்சை கலர் இருந்தால் 2 சொட்டு சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில்,தயிர்,ஆயில் மற்றும் சர்க்கரை சேர்த்து விஸ்க் வைத்து கலக்கவும்.
- 3
பின் அதே பாத்திரத்தில்,சல்லடையில் மாவு,பேக்கிங் பவுடர்,சோடாவை சலித்து சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 4
பின் பச்சை கலர் கலந்த பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்.
- 5
அதிக நேரம் கலக்க தேவை இல்லை.கடைசியாக பிஸ்தா எஸ்ஸென்ஸ் மற்றும் பிஸ்தா பொடி 3 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.
- 6
கேக் மோல்டில் எண்ணெய் தடவி,கீழ் பட்டர் பேப்பர் போட்டு கலந்து வைத்துள்ள கலவையை சேர்த்து 2 முறை நன்றாக தட்டிக் கொள்ளவும்.
கலவையில் சிறிதளவு 1/2ஸ்பூன்பிஸ்தா பொடி தூவவும்.
- 7
அடுப்பில் கடாயை வைத்து மண் அல்லது ஸ்டாண்ட் போட்டு 5 நிமிடங்கள் மிதமான தீயில் சூடு செய்யவும்.
- 8
பின் மோல்டை உள்ளே வைத்து மூடி போட்டு 40 நிமிடங்கள் வேக விடவும்.ஃபோர்க் ஆல் குத்தினால் ஒட்டாமல் வருகின்றதா என்று பார்த்து விட்டு கேக்கை வெளியே எடுத்து ஆற வைக்கவும்.
- 9
ஆறிய பிறகு பட்டர் பேப்பர் எடுத்து விட்டு பொடி செய்த சர்க்கரையில் 2ஸ்பூன் பால் கலந்து கரைந்ததும் கேக் மேல் சேர்த்து பின் நறுக்கிய பிஸ்தா சேர்த்து அலங்கரிக்கவும்.
சர்க்கரை,பால் கலவையை எல்லா துண்டுகள் மேலும் தடவாமல்,சாப்பிடும்போது பயன்படுத்தினால் நல்லது.
- 10
பின் துண்டுகள் போட்டு பரிமாறலாம்.
- 11
அவ்வளவுதான்.சுவையான பிஸ்தா பவுண்ட் கேக் ரெடி.
குழந்தைகளும்,பெரியவர்களும் சாப்பிடும் வகையில் குறைவான அளவு சர்க்கரை சேர்த்துள்ளேன். அதிக இனிப்புக்கு 3/4கப் சர்க்கரை சேர்க்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
-
-
-
சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
#TheChefStory #ATW2 Muniswari G -
-
-
-
-
-
-
-
💓🎂🍰💚பிஸ்தா கேக்💚🍰🎂💓(pista cake recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தியுடன் நண்பர்கள் தின போட்டியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. வெகு குறுகிய நாட்களில் மலர்ந்த நட்பு. நீண்ட நாள் பழகிய உணர்வு.மிகுந்த இடைவேளைக்கு பிறகு COOKPAD ல் நண்பர்கள் தின போட்டியின் மூலம் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
-
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi
More Recipes
கமெண்ட் (10)