கராச்சி அல்வா (chewy Karachi halwa recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

கராச்சி அல்வா (chewy Karachi halwa recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

90 நிமிடங்கள்
6 நபர்கள்
  1. 1கப் கார்ன் பிளார்
  2. 2-1/2கப் சர்க்கரை
  3. 1டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  4. 1/4கப் நெய்
  5. 1ஸ்பூன் ஏலக்காய் தூள்
  6. சிறிதளவுஃபுட் கலர்
  7. 3கப் தண்ணீர்
  8. 1/2கப் தண்ணீர் சர்க்கரைக்காக
  9. தேவையானஅளவு பூசணி விதைகள்

சமையல் குறிப்புகள்

90 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கான்பிளவர் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் சர்க்கரையைப் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு சர்க்கரை கரையும் அளவு காய்ச்சவும்..

  3. 3

    கரைந்ததும் அதில் எலுமிச்சைசாறு கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளவரை சேர்த்து கலந்து விடவும்

  4. 4

    சிறிது நேரத்தில் கெட்டியாக ஆரம்பிக்கும் அப்பொழுது சிறிது சிறிதாக இடைவெளிவிட்டு நெய் சேர்க்கவும்

  5. 5

    சிறிது ஃபுட் கலர் சேர்த்து கலந்து கொள்ளவும் இடையிடையே நெய் விட்டு கலந்து கொள்ளவும்

  6. 6

    சுருண்டு வரும்போது பூசணி விதைகளை சேர்க்கவும்

  7. 7

    ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  8. 8

    கடாயில் ஒட்டாமல் நாம் விட்ட நெய் இறுதியாக அல்வாவை விட்டு பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து எண்ணெய் தடவிய பாத்திரத்தில் மாற்றவும்... மேலேயும் சிறிது பூசணி விதைகளை தூவி அலங்கரிக்கலாம்

  9. 9

    அல்வா ஆறியதும் அதனை துண்டுகள் போட்டு பரிமாறலாம்

  10. 10

    இப்போது அருமையான கராச்சி அல்வா தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes