இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கேரட்
  2. 1 கத்தரிக்காய்
  3. 1டம்ளர் துவரம் பருப்பு
  4. 3/4டம்ளர் பாசிப்பருப்பு
  5. 4 பல்பூண்டு
  6. 1/2கப் சின்ன வெங்காயம்
  7. 1 தக்காளி
  8. 1ஸ்பூன் கடுகு
  9. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 2ஸ்பூன் சாம்பார் பொடி
  11. உப்பு
  12. சிறிதளவுபெருங்காயத்தூள்
  13. 2மேசைக்கரண்டி எண்ணெய்
  14. சிறிதளவுகொத்தமல்லி
  15. சிறிதளவுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    குக்கரில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து கழுவி எடுத்து இதில் சின்ன வெங்காயம், தக்காளி, கேரட், கத்தரிக்காய் சிறிதாக நறுக்கி சேர்க்கவும்.

  2. 2

    மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.

  3. 3

    விசில் போனதும் இதனை கரண்டி வைத்து மசித்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து லேசாக கொதிக்க விடவும். தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து பூண்டு பல் நறுக்கியது கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  4. 4

    தாளித்ததை சாம்பாரில் சேர்த்து கலந்து விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.இட்லி சாம்பார் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes