வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#birthday1
#club

இது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)

#birthday1
#club

இது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் மஷ்ரூம்
  2. 200 பேபி கார்ன்
  3. 1 கப் ஸ்வீட் கார்ன்
  4. 1 கப் பச்சை பட்டாணி
  5. 6 கேரட்
  6. 15 பீன்ஸ்
  7. 4 பெரிய வெங்காயம்
  8. 4 தக்காளி
  9. 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. 1 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  11. 2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  12. 1/2 ஸ்பூன் வறுத்த மல்லித்தூள்
  13. 1/2 ஸ்பூன் வறுத்த சீரகத்தூள்
  14. 1/4 ஸ்பூன் மிளகுத் தூள்
  15. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  16. 1/2 கப் கடலெண்ணெய்
  17. 1 ஸ்பூன் கடுகு
  18. 1 ஸ்பூன் சோம்பு
  19. 2 பட்டை
  20. 2கிராம்பு
  21. 2 ஏலக்காய்
  22. 2 மராத்தி மொக்கு
  23. 2அன்னாச்சி பூ
  24. 2 ஜாதிபத்ரி
  25. 1பிரியாணி இலை
  26. தேவையானஅளவுஉப்பு
  27. சிறிதுகொத்தமல்லி தழை
  28. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கவும் மஷ்ரூம் கேரட் பீன்ஸ் பேபி கார்ன் ஆகியவற்றை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    பின் எண்ணெய் சூடானதும் பேபி கார்ன் கேரட் பீன்ஸ் மஷ்ரூம் சேர்க்கவும்

  3. 3

    பின் இதற்கு தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்

  4. 4

    அடுப்பை மெல்லிய தீயில் வைத்து மூடி போட்டு 8 நிமிடங்கள் வரை வேகவிடவும் அவ்வப்போது திறந்து கிளறி விடவும்

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் மராத்தி மொக்கு அன்னாச்சி பூ ஜாதிபத்ரி பிரியாணி இலை சேர்த்து வதக்கவும் பின் கடுகு சோம்பு சேர்த்து பொரிய விடவும்

  5. 5

    பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  6. 6

    வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது ப்ரவுன் நிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்

  7. 7

    பின் (வீட்டில் அரைத்த மசாலா தூள் சேர்ந்திருப்பதால் கடாய் மசாலா தூள் தேவையில்லை) மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்

  8. 8

    மசாலா தூள் பச்சை வாசனை போனதும் வதக்கிய காய்கறிகள் சேர்த்து கூட ஸ்வீட் கார்ன் சேர்த்து கொள்ளவும்

  9. 9

    பின் வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து நன்கு கலந்து விடவும் 5 நிமிடங்கள் வரை மூடி வைத்து மெல்லிய தீயில் வேக விடவும்

  10. 10

    பின் எல்லா தண்ணீரும் வற்றி சுருவளாக வரும் வரை நன்றாக கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  11. 11

    சுவையான ஆரோக்கியமான வெஜ் கடாய் கறி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes