சென்னா மசாலா(channa masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி குக்கரில் போடவும்
- 2
பின் ஒரு துணியில் டீத்தூள் முடி போட்டு கடலையுடன் சேர்க்கவும்
- 3
பின் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 விசில் வந்ததும் இறக்கவும்
சுண்டல் நன்கு மாவாக மசிய வேண்டும்
- 4
வெங்காயம் தக்காளி ஆகியவற்றை அரைக்க கூடாது தனித்தனியாக துருவி கொள்ளவும்
சென்னா மசாலா தூள் நான் வீட்டிலே ரெடி செய்திருக்கிறேன் இதை தனி பதிவாக போடுகிறேன் நீங்க கடையில வாங்கறது என்றாலும் வாங்கலாம்
சுண்டல் ப்ரஷர் அடங்கியதும் திறந்து கொள்ளவும்
- 5
தண்ணீர் தனியாக சுண்டல் தனியாக வடிகட்டி கொள்ளவும் டீத்தூள் மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
வெங்காயத்தை முட்டை ஆம்லேட் க்கு கட் செய்வது போல் அதவிட மிகவும் மெல்லியதாக துருவ வேண்டும் அரைக்க கூடாது
- 6
எண்ணெய் சூடானதும் கடுகு சீரகம் சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் துருவிய வெங்காயம் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்றாக ப்ரவுன் நிறம் வரும் வரை வதக்கவும்
- 7
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போக வதக்கவும்
தக்காளியையும் அரைத்து சாறாக எடுக்க கூடாது துருவி கொள்ளவும்
- 8
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனதும் துருவிய தக்காளி சேர்த்து வதக்கவும்
நான் காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்திருக்கிறேன் கலர் நன்றாக கிடைக்கும் காரம் இருக்காது
- 9
காஷ்மீர் மிளகாய்த்தூள் மற்றும் தனி மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
- 10
பின் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் சோலே மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 11
பின் மசாலா தூள் பச்சை வாசனை போக வதக்கவும் பின் கொண்டைக்கடலை வேகவைத்த தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 12
நன்றாக பத்து நிமிடம் வரை கொதிக்க விடவும் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது மசாலா தூள் வகைகள் அனைத்தும் பச்சை வாசனை போயி திக்காக வந்ததும் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்க்கவும்
- 13
பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கொதிக்க விடவும் அவ்வப்போது கிளறி விடவும் பின் எண்ணெய் பிரிந்து வந்ததும் நெய் விடவும்
- 14
பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி விட்டு அடுப்பை மெல்லிய தீயில் வைத்து மேலும் சிறிது நேரம் வரை கொதிக்க விட்டு இறக்கவும்
கலரும் சுவையும் மணமும் மிகவும் நன்றாக இருக்கும்
- 15
சுவையான ஆரோக்கியமான சென்னா மசாலா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
#wt2பூரிக்கு சென்னா மசாலா செய்யும்போது மிகுதியாக இருந்தால் மாலையில் குழந்தைகளுக்கு தோசைக்கல் வைத்து மொறுமொறுவென்று நெய் சேர்த்துக் கொடுக்கலாம். ஏற்கனவே நான் சென்னா மசாலா ரெசிபி கொடுத்துள்ளேன். Meena Ramesh -
வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#clubஇது கல்யாண விருந்து ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
சென்னா மசாலா சுண்டல் (Channa masala sundal recipe in tamil)
#goldenapron3#week21குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பாருங்கள். Sahana D -
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
சென்னா மசாலா வித் லெஃப்ட் ஓவர் சென்னா
#leftover #ilovecookingநம்ம விட்டுல் சென்னா வைத்து சுண்டல் செய்யும் போது எப்போதாவது மீந்து போகும் அதை அப்படியே ஃபிரிட்ஜ்ல வைத்து சாப்பிடுவோம் அதுக்கு பதிலா கொஞ்சமாக மாசால சேர்த்து இப்படி சாப்பிட்டு பாருங்க 😋😋 Manickavalli M -
வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)
#birthday1#clubஇது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது Sudharani // OS KITCHEN -
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
-
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
-
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala -
சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
வீட்டில் பூரிக்கு சென்னா மசாலா செய்யும்பொழுது குழந்தைகளுக்கு தோசை ஊற்றி அதில் சென்னா மசாலா நிரப்பி நெய் விட்டு மொறுமொறுவென்று செய்து கொடுத்தாள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சப்போஸ் நீங்கள் சென்னா மசாலா கொஞ்சம் நீர்க்க செய்திருந்தால் ஒரு வானலியில் தேவையான அளவு சென்னா மசாலாவை போட்டு கொஞ்சம் சுண்ட வைத்து கொள்ளவும்.இப்போது கிரேவி கெட்டியாக இருக்கும் தோசையிள் வைக்க ஏதுவாக இருக்கும் .சன்னா மசாலா மீதம் ஆனால் கூட மாலையில் இதுபோல் சென்னா மசாலா தோசை சுட்டு சாப்பிடலாம். Meena Ramesh -
-
-
-
-
More Recipes
- கருப்பட்டிகாப்பி(என்மாமியாரின் ஸ்பெசல்)(village style palm jaggery coffee recipe in tamil)
- கிராமிய ரசம்(உடனே செய்யலாம்)(village style rasam recipe in tamil)
- சிக்கன் குழம்பு (village style chicken gravy recipe in Tamil)
- கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil)
- முடக்கத்தான் கீரை பொரியல்(mudakkatthan keerai poriyal recipe in tamil)
கமெண்ட்