விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#VT
ஆடிப் பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வார்கள்.அதில் கண்டிப்பாக தயிர் சாதம் இருக்கும்.அதற்கு சைட்டிஷ்ஷாக ஊறுகாயை பயன்படுத்தலாம்.

விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)

#VT
ஆடிப் பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வார்கள்.அதில் கண்டிப்பாக தயிர் சாதம் இருக்கும்.அதற்கு சைட்டிஷ்ஷாக ஊறுகாயை பயன்படுத்தலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
6பேர்
  1. 2 கப்குழைய வடித்த சாதம்
  2. 1 கப்புளிக்காத கெட்டி தயிர்
  3. 2 டம்ளர்காய்ச்சி ஆறின பால்
  4. 1/4 கப்மாதுளை முத்துக்கள்
  5. ருசிக்குஉப்பு
  6. 1 டேபிள் ஸ்பூன்நறுக்கின ப.மிளகாய்
  7. தாளிக்க:-
  8. 1 ஸ்பூன்கடுகு
  9. நறுக்கின ப.மிளகாய்
  10. 1 ஆர்க்குகருவேப்பிலை
  11. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  12. 1 ஸ்பூன்எண்ணெய்
  13. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.ப.மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.மாதுளம் பழத்தை உரித்து முத்துக்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    சாதத்தை நன்கு குழைவாக வடித்து, உப்பு சேர்த்து, பௌலில் போடவும்.

  3. 3

    பிறகு தயிரை சேர்க்கவும்.

  4. 4

    அடுத்து பாலை சேர்த்து நன்கு கையால் பிசைந்துக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பை சிறு தீயில் வைத்து சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,போட்டு வெடித்ததும்,ப.மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளித்து, அடுப்பை நிறுத்தி விடவும்.

  6. 6

    தாளித்ததை சாதத்தில் போடவும்.

  7. 7

    அடுத்து, மாதுளம் முத்துக்களை போட்டு, ஒன்று சேர கலந்துக் கொள்ளவும்.

  8. 8

    பிறகு சிறிய பௌலுக்கு மாற்றிக் கொள்ளவும்.இதற்குஊறுகாய் நல்ல காம்பினேஷன்.இப்போது, சுலபமான, சுவையான,*தயிர் சாதம் வித் ஊறுகாய்* தயார்.மாதுளம் பழம் சேர்ப்பதால், கூடுதல் சுவை. செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes

More Recipes