* சௌசௌ கூட்டு *(chow chow koottu recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

சகோதரி புனிதா ரவிக்குமார் அவர்களது ரெசிபி. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால், எலும்புகளை வலுப் பெறச் செய்கின்றது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை சமைத்துக் கொடுக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.@VinoKamal, ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
8 பேர்
  1. 2சௌசௌ சிறியது
  2. 2தக்காளி சிறிய சைஸ்
  3. 1/2 கப்ப.பருப்பு
  4. 1மூடிசிறியதேங்காய்
  5. 1 டேபிள் ஸ்பூன்சாம்பார் பொடி
  6. 1/2 டீ ஸ்பூன்ம.தூள்
  7. 3ப.மிளகாய் (சிறியது)
  8. ருசிக்குக.உப்பு
  9. 1 டேபிள் ஸ்பூன்நறுக்கின கொத்தமல்லி தழை
  10. 1 டீ ஸ்பூன்தாளிக்க:- கடுகு
  11. 1 ஸ்பூன்உ.பருப்பு
  12. 2சி.மிளகாய்
  13. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  14. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  15. 2 ஸ்பூன்எண்ணெய்
  16. 3 டம்ளர்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சௌசௌ, தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.தேங்காயை துருவித் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பை சிறு தீயில் வைத்து, வெறும் குக்கரில், பருப்பை நன்கு கருகாமல் வறுத்து, அதனுடன், நறுக்கின, சௌசௌ, தக்காளி,ம.தூள், சாம்பார் தூள்,உப்பு,கொத்தமல்லி தழை, போடவும்.

  3. 3

    பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி மூடி, 3 விசில் விட்டு வேகவிடவும்.

  4. 4

    சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய், ப.மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.

  5. 5

    ஸ்டீம் போனதும்,அடுப்பை சிறு தீயில் வைத்து, அரைத்த விழுதை சேர்த்து, மூடாமல், 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதித்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  6. 6

    அடுப்பை சிறு தீயில் வைத்து, சிறு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு வெடித்ததும், உ.பருப்பை போடவும்.

  7. 7

    உ.பருப்பு சிவந்ததும், மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளிக்கவும்.

  8. 8

    தாளித்ததை கூட்டில் கொட்டி, பிறகு பௌலுக்கு மாற்றவும்.

  9. 9

    இப்போது, சுடசுட, சுலபமான, சுவையான,*சௌசௌ கூட்டு* தயார்.இது, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும். சுடு சாதத்தில் கூட்டை போட்டு,நெய் விட்டு, சுட்ட அப்பளத்துடன், சாப்பிடலாம். செய்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes