கருப்பட்டி பாகு பொங்கல்(karuppatti pahu pongal recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#SA நெய் சேர்க்கவில்லை.எப்பொழுதும் சர்க்கரை சேர்ப்போம்.இங்கு நான்,கருப்பட்டி பாகு சேர்த்துள்ளேன்.ருசிக்கு குறைவில்லை.

கருப்பட்டி பாகு பொங்கல்(karuppatti pahu pongal recipe in tamil)

#SA நெய் சேர்க்கவில்லை.எப்பொழுதும் சர்க்கரை சேர்ப்போம்.இங்கு நான்,கருப்பட்டி பாகு சேர்த்துள்ளேன்.ருசிக்கு குறைவில்லை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
4பேர்
  1. 1/2கப் பச்சரிசி
  2. 1/4கப் சிறு பருப்பு
  3. 1.25கப் பொடித்த கருப்பட்டி/3/4கப் கருப்பட்டி பாகு
  4. 3ஏலக்காய்
  5. 1பின்ச் உப்பு
  6. தேவையானஅளவு முந்திரி
  7. தேவையானஅளவு த்ராட்சை

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.பொடித்த கருப்பட்டி எனில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். நான் கருப்பட்டி பாகு எடுத்துள்ளேன்.

  2. 2

    அடுப்பில் அடி கனமான பாத்திரம் வைத்து அதில் சிறு பருப்பு சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும்.பின் பருப்பு,அரிசி இரண்டையும் நன்றாக கழுவிக் கொள்ளவும்.

  3. 3

    பருப்பு மற்றும் அரிசி இரண்டையும் சேர்த்து 1 கப்புக்கு 6 மடங்கு தண்ணீர் சேர்க்கவும். அதில் பருப்பு அரிசி இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    அரிசி,பருப்பு கொதித்ததும்,முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து வேக விடவும்.

  5. 5

    பருப்பும்,அரிசியும் குழைவாக வெந்து வரும் வரை நன்கு வேக விடவும்.

  6. 6

    பின்பு இதனுடன் எடுத்து வைத்துள்ள கருப்பட்டி பாகு,கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடவும்.பின்,1பின்ச் உப்பு, மற்றும் ஏலக்காய் இடித்து சேர்க்கவும்.

  7. 7

    பாகு,அரிசி பருப்புடன் சேர்ந்து நன்றாக கலந்தது சிறிது கெட்டியானதும் இறக்கவும்.

  8. 8

    அவ்வளவுதான். சுவையான,கருப்பட்டி பாகு பொங்கல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes