பஞ்சாபி ஸ்டைலில் ஆலூ பாலக் (Punjabi style Aloo palak recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#Pj

பஞ்சாபி ஸ்டைலில் ஆலூ பாலக் (Punjabi style Aloo palak recipe in tamil)

#Pj

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 3உருளைக்கிழங்குகள்
  2. 1 கட்டு பாலக் கீரை
  3. 1 வெங்காயம்
  4. 1/8 டீஸ்பூன் வெந்தயம்
  5. 1/2 டீஸ்பூன் சீரகம்
  6. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 2 டேபிள் ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாலக் கீரையை கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    உருளைக் கிழங்கை வேகவைத்து தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து, சீரகம்,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும், இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து கலந்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அத்துடன் நறுக்கிய பாலக் கீரையை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பின்னர் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    பாலக்,உருளைக்கிழங்கை இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து,அத்துடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  7. 7

    ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் மூடி வைத்து, நன்கு கலந்து இறக்கினால் ஆலூ பாலக் தயார்.

  8. 8

    தயாரான ஆலூ பாலக் சப்ஜியை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.

  9. 9

    இப்போது மிகவும் சுவையான பஞ்சாபி ஸ்டைல் ஆலூ பாலக்
    சப்ஜி சுவைக்கத்தயார். இந்த சப்ஜி சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes