உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ட் குடை மிளகாய் பஜ்ஜி(stuffed capsicum bajji recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#FR - Potato masala stuffed capsikam bajji
Week - 9
முழு குடை மிளகாயில் உருளை கிழங்கு மசாலாவை நிறைச்சு அதை பஜ்ஜி மாவில் டிப் செய்து ஸ்டப்ப்ட் பஜ்ஜி செய்து பார்த்தத்தில் மிகவும் அருமையான சுவையுடனும் பார்க்க வித்தியாச மான தோற்றத்துடனும் இருந்தது...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20-30 நிமிடங்கள
3 பரிமாறுவது
  1. 3 குடை மிளகாய்
  2. 1பெரிய சைஸ் வேக வைத்த உருளை கிழங்கு
  3. 2வெங்காயம் பொடியா நறுக்கினது
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1காரட் பொடியா நறுக்கினது
  6. 1கைப்பிடி பொடியா நறுக்கின கொத்தமல்லி
  7. 1- 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  9. 1 டீஸ்பூன் சீரகம்
  10. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  11. 1 கப் கடலை மாவு
  12. 1 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  13. தேவைக்குஉப்பு
  14. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

20-30 நிமிடங்கள
  1. 1

    முதலில் வேக வைத்த உருளை கிழங்கை நன்றாக மசித்து வைத்துக்கவும். ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து

  2. 2

    அத்துடன் பொடியா நறுக்கின பச்சை மிளகாய், வெங்காயம், காரட் சேர்த்து லேசா வதக்கின பிறகு மஞ்சள்தூள், மிளகாய் தூள்

  3. 3

    கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கியதும் ஸ்டாவ்வ் ஆப் செய்து மசாலாவை வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளை கிழங்குடன் சேர்க்கவும்

  4. 4

    அத்துடன் பச்சை கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து பிசைந்து வைத்துக்கவும்.குடை மிளகாயுடய மேல் பாகத்தை சிறிது வெட்டி மசாலா பில்லிங் வைக்கிம்படி ஓபன் செய்து வைத்துக்கவும்

  5. 5

    அதற்குள்ளே மசாலாவை நிறைத்து கட் செய்து எடுத்த மேல் பாகத்தை வைத்து அழுத்தி அடைத்து மூடி விடவும். கடலை மாவை பஜ்ஜி பதத்துக்கு கரைத்துவைத்து க்கவும்

  6. 6

    ஸ்டவ்வில் எண்ணெய் வைத்து நன்கு சூடானதும் மீடியம் ஹீட்டில் வைத்து, ஒரு ஸ்டப்ப்ட் குடிமிளகாய் எடுத்து பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணையில் போட்டு 1/2 நிமிடம் கழிஞ்சு மெதுவாக திருப்பி விட்டு நன்கு வெந்து இரண்டு பக்கவும் மொறு மொறுப்பானதும் எண்ணையில் இருந்து எடுத்துவிடவும்...

  7. 7

    சுவையான குடை மிளகாய் உருளைக்கிழங்கு மசாலா ஸ்டப்ப்ட் பஜ்ஜி தயார்... இரண்டு, அல்லது 4 பங்காக கட் செய்து டொமட்டோ சாஸுடன் தொட்டு சாப்பிடவும்... குட்டிஸ் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்...பர்த்டே பார்ட்டியின் பொழுது செய்ய ஒரு அசத்தலான ஸ்னாக்... 😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes