*கடப்பா காரச் சட்னி*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த சட்னி மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும், இருக்கும். தோசை, இட்லிக்கு பக்கா காம்பினேஷன். செய்வது சுலபம்.

*கடப்பா காரச் சட்னி*

இந்த சட்னி மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும், இருக்கும். தோசை, இட்லிக்கு பக்கா காம்பினேஷன். செய்வது சுலபம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
8 பேர்
  1. பெரிய வெங்காயம் 2
  2. மீடியம் சைஸ் தக்காளி 2
  3. பெரிய பல் பூண்டு 4
  4. புளி நெல்லிக்காய் அளவு
  5. கல் உப்பு ருசிக்கு
  6. சி. மிளகாய் 6
  7. காஷ்மீரி மிளகாய் 3
  8. தாளிக்க:- கடுகு 3/4 டீ ஸ்பூன்
  9. சி. மிளகாய் 3
  10. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  11. ந.எண்ணெய் 3 1/2 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில், பூண்டு, புளி, காஷ்மீரி மிளகாய், சி.மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் சேர்த்து, அரைக்கவும்.

  4. 4

    அரைத்ததை பௌலுக்கு மாற்றவும்.

  5. 5

    தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

  6. 6

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், ந.எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் விட்டு சூடானதும், கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, தாளித்ததும், அரைத்த வெங்காய விழுதை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.

  7. 7

    வதக்கினதும், தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கி, மேலே, 1 ஸ்பூன் காய்ச்சாத ந.எண்ணெய், கறிவேப்பிலையை போட்டு, அடுப்பை நிறுத்தி விடவும்.

  8. 8

    பிறகு நன்கு கலந்து பௌலுக்கு மாற்றவும்.

  9. 9

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*கடப்பா காரச் சட்னி*தயார்.

  10. 10

    தோசைக்கு இந்த சட்னி, மிகவும் ஆப்ட்டாக இருக்கும். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes