எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரிசி - 1 கப்
  2. சின்னவெங்காயம் - 1/4 கப்
  3. நல்லெண்ணை - 1 தேக்கரண்டி
  4. துவரம் பருப்பு - 1/4 கப்
  5. காய்கறிகள் - 1/2 கப்
  6. தண்ணீர் - 3 கப்
  7. தக்காளி - 1
  8. கடுகு - கால் தேக்கரண்டி
  9. சீரகம் - கால் தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
  11. பச்சை மிளகாய் - 1
  12. பெருங்காயம் - 2 சிட்டிகை
  13. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  14. நெய் - 1 ஸ்பூன்
  15. உப்பு - தேவையான அளவு
  16. கடுகு - கால் தேக்கரண்டி
  17. சாம்பார் மசாலாவிற்கு;
  18. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
  19. உளுந்து - 1 தேக்கரண்டி
  20. காய்ந்த மிளகாய் - 2
  21. வெந்தயம் - கால் தேக்கரண்டி
  22. சீரகம் - அரை தேக்கரண்டி
  23. கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
  24. துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
  25. கொத்தமல்லி தழை -சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வாணலியில் சாம்பார் சாதம் மசாலா பொடி தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஆறிய பின்னர் அவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைது, அந்தப் பொடியை தனியே வைக்கவும்.

  3. 3

    அரிசியையும், துவரம் பருப்பையும் தனித்தனியே 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி தழை, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  4. 4

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம், முழு பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

  5. 5

    அடுத்து தக்காளியுடன், மஞ்சள் பொடி, பெருங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

  6. 6

    இப்போது அனைத்து காய்கறிகள், அரிசி, பருப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து நீரை ஊற்றி வேக வைக்கவும்.

  7. 7

    முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் காத்திருந்து, பின் அடுப்பை அணைக்கவும்.

  8. 8

    குக்கர் ஆவி போன பிறகு, மூடியைத் திறந்து சாம்பார் சாத மசாலா பொடியை சேர்த்துக் கலக்கவும்.

  9. 9

    குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் வேக விடவும். பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான சாம்பார் சாதம் தயார்.
    1 ஸ்பூன் நெய் ஊற்றி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes