சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil)

#மழைக்காலஉணவுகள்
மழைக்காலம் என்றாலே இதமான நிலையை உணரலாம். குளிரிக்கு இதமாக சுவையாக அதோடு சூடாக ஏதாவது சாப்பிட தோன்றும் அதில் புதுமையான இந்த சீஸ் மற்றும் சட்னி நிரப்பிய பாம்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். சூடாக தேநீரோடு சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
உருளைக் கிழங்கை அவித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்
- 2
வேக வைத்த சாதத்தை அரைத்துக்கொள்ளவும்
- 3
மசித்த உருளைக்கிழங்கோடு கரம் மசாலா சில்லி ஃப்ளேக்ஸ் துருவிய பனீர் அரைத்த சாதம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்
- 4
சட்னி செய்வதற்கு தேவையான பொருட்களை மிக்ஸியில் நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
- 5
உருளைக்கிழங்கு கலவையை சம பாகங்களாகப் பிரித்து உருண்டை பிடித்து நடுவில் குழி போல் செய்யவும்
- 6
அந்தக் குழிக்குள் சட்னி மற்றும் துருவிய சீஸ் வைக்கவும்
- 7
பிறகு அதனை நன்றாக வெடிப்பு எதுவும் இல்லாமல் மூடி உருண்டைகளாக பிடிக்கவும்
- 8
மாவில் சிறிது தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் செய்து அதில் உருண்டைகளை பிரட்டி பிறகு பிரெட் தூளில் உருண்டைகளை பிரட்டி எடுக்கவும்
- 9
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 10
இதனை சூடாக சாதத்தோடு சட்னியோடு அல்லது மாலை தேநீரோடு வைத்து சாப்பிடவும்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்