சமையல் குறிப்புகள்
- 1
ஓரியோ பிஸ்கட்களை நன்கு மிருதுவாக பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் பேகிங் பௌடர், பேகிங் சோடா சேர்த்து சலித்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஓரியோ பொடியுடன் சேர்த்து கலக்கவும்.
- 2
வெண்ணெயை உருக்கவும். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் சிறிது வெண்ணெய்தடவவும். மீதமுள்ள வெண்ணெயை மாவு கலவையுடன் சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
- 3
அதில் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து சிறிது சிறிதாக பாலை சேர்த்து கலக்கவும்.
- 4
ரிப்பன் போன்ற தளர்வான மாவு பதம் வரும் வரை பாலை சேர்த்து கலக்கவும். 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- 5
இப்பொழுது அந்த மாவு கலவையை வெண்ணெய் தடவிய கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றவும். கேக் அதன் அளவில் இரட்டிப்பு மடங்கு உயரும் என்பதால் சற்று உயரமான கண்ணாடி பாத்திரத்தை உபயோகிக்கவும்.
- 6
800 அல்லது 900 வாட்ஸ் வெப்ப அளவில் 5 நிமிடங்கள் பேக் செய்யவும். ஐந்து நிமிடங்கள் பிறகு கேக் சரியாக பேக் ஆகியுள்ளதா என்பதை சரி பார்த்து இல்லையென்றால் மேலும் ஒரு நிமிடம் பேக் செய்யவும்.
- 7
பாத்திரத்தை தலைகீழாக வெளியே எடுத்து கேக்கை வெளியே எடுக்கவும். இதுவே சுவையான ஓரியோ கேக் செயும் முறையாகும்.
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்