சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கு மற்றும் காரட்டை வேக வைக்கவும். வெந்த காய்கறிகளை வடிகட்டவும். அதனுடன் சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும்.
- 2
அவற்றை வட்டமாக தட்டி ரவையில் முக்கி தனியே வைக்கவும்.
- 3
ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும். உருகியவுடன் அதில் உருளை காய்கறி வட்டங்களை போட்டு இரு புறமும் சிவந்தவுடன் எடுக்கவும்.
- 4
இப்பொழுது ப்ரெட் ஸ்லைஸ்களை எடுத்து தவாவில் டோஸ்ட் செய்யவும் இருபுறமும். ஒரு ஸ்லைஸ் மீது புதினா சட்னி மற்றும் மல்லி தழை போடவும். அதன் மீது உருளை காய்கறி கலவையால்செய்த ஒரு வட்டத்தை வைத்து அதன் மேல் மற்றொரு ப்ரெட் வைத்து டோஸ்ட் செய்யவும்.
- 5
டோஸ்ட் செய்தவற்றை இரண்டாக வெட்டி ருசிக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9354199





கமெண்ட்