சத்தான கருப்பு உளுந்து இனிப்பு இட்லி (Karuppu ulunthu inippu idli recipe in tamil)

இது பெண்களுக்கு உகந்த ஸ்வீட்,, இடுப்பு எலும்பை உறுதியாக்கும்,, வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு கட்டாயம் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து கொடுங்கள்..

சமையல் குறிப்புகள்
- 1
1 கப் இட்லி அரிசி 1/2 கப் கருப்பு முழு உளுந்தை 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பிறகு அதை கிரைண்டரில் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியாக வடை மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும் அதனுடன் 1டீஸ்பூன் ஏலக்காய் தூளும், கொஞ்சமாக உப்பு போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.
- 2
அந்த கலவையை 4 மணி நேரம் மட்டும் புளிக்க வைக்க வேண்டும் அதற்கு மேல் வேண்டாம், புளித்த வைத்த மாவில் கருப்பு எள்ளு, இனிப்புக்கு தக்கவாறு நாட்டு சர்க்கரை, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காயை சேர்க்க வேண்டும்...
- 3
பிறகு அந்த கலவையை நன்றாக கலக்கி இட்லி தட்டில் நெய் தடவி மாவை ஊற்றி எடுத்தால் சுவையான சத்தான இனிப்பு உளுந்து இட்லி அல்லது உளுந்து புட்டு தயார்,,, இது பெண்களுக்கு மிக உகந்தது... மற்றும் இடுப்பு எலும்புக்கு உறுதியை கொடுக்கும்.. 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக செய்து கொடுங்கள்.. நன்றி 😍😍🙏
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்