தக்காளி சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
பொதுவாகவே சாதம் செய்யும் முறை படி நன்றாக கழுவிய அரிசியை வடித்து சாதம் செய்து கொள்ளவும். பின்பு தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இப்போது பச்சை மிளகாயை அரைத்துக் கொண்டு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சீரகம், ஆகியவற்றை தாளித்து பின் நாம் வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
- 3
பின் தேவையான அளவு வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவேண்டும் இறுதியாக தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
- 4
மஞ்சள்தூளையும் உப்பையும் தேவையான அளவு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி சாதம் சேர்த்து கிளறவேண்டும்.
- 5
அடுப்பை நிறுத்தும் முன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.
இப்போது சுவையான தக்காளி சாதம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13325554



கமெண்ட்