ரொமான்டிக் ரோஸ்மில்க் கேக் (Romantic rosemilk cake recipe in tamil)

ரொமான்டிக் ரோஸ்மில்க் கேக் (Romantic rosemilk cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா, உப்பு, பேகிங் பவுடர் இவை மூன்றையும் சலித்து, கலந்து வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் முட்டை சேர்த்து ஒரு நிமிடம் பீட்டரால் கலக்கவும்.
- 3
அதனுடன் சர்க்கரை மற்றும் வென்னிலா சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
அதனுடன் ரோஸ் சிரப் சேர்த்து கலந்து, பிறகு ரோஸ் ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 5
பின்பு எண்ணெய் மற்றும் ரோஸ் வாடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 6
சலித்த மாவு கலவையை மூன்று பிரிவாக சேர்த்து மிருதுவாக கலக்கவும்்
- 7
தயார் செய்த கேக் கலவையை 12 * 8 * 3 வடிவ பாத்திரத்திற்கு மாற்றி, ஒரு குச்சியால் கலவையை கலந்து, லேசாக மேஜை மேல் தட்டவும்.
- 8
180• டிகிரியில் 15 நிமிடங்கள் முற்சூடு செய்த அவனில், 40 முதல் 45 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
- 9
7 நிமிடங்கள் ஆற விட்டு, ஒரு குச்சியை வைத்து கேக் முழுவதும் துளைகள் இட்டு வைக்கவும்.
- 10
பிறகு ஒரு பாத்திரத்தில் பால், க்ரீம், மில்க் மெயிட்,
- 11
மற்றும் மீதமுள்ள ரோஸ் சிரப் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 12
கலக்கிய கலவையை கேக் மீது பரவலாக ஊற்றவும். சிறிது பாலை பறிமாரும் பொழுது மேலே ஊற்ற வைத்துக்கொள்ளவும்.
- 13
இதற்கு மேல் விப்ட் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும்.
- 14
அலங்கரித்த கேக் மேல் ரோஜா இதழ்கள் மற்றும் நறுக்கிய பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும்.
- 15
தயார் செய்த கேக்கை 2 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
- 16
2 மணி நேரம் கழித்து துண்டுகள் போடவும்.
- 17
பரிமாறும் முன்பு கேக்கின் மேலே பால் கலவையை சிறிது ஊற்றி பரிமாறவும்.
- 18
வாயில் வைத்தவுடன் கரையும் இந்த அசத்தலான கேக்கை நீங்களும் செய்து உங்களை சுற்றி இருப்பவர்களை அசத்துங்கள்.... 🤩
Similar Recipes
More Recipes














































கமெண்ட் (15)