ராகி இடியப்பம் (Raagi idiappam recipe in tamil)
#steam
ஆவியில் வேக வைத்த உணவுகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது.அரிசி மாவில் செய்யும் இடியாப்பம் விட சிறுதானியத்தில் இடியப்பம் செய்யும்போது நம் உடம்பிற்கு சிறுதானியத்தில் உள்ள எல்லா சத்தும் கிடைக்கும்.அதில் ஒரு முயற்சியாக தான் இந்த ராகி இடியாப்பம்.

சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவை லேசாக வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.
- 2
ராகி மற்றும் அரிசி மாவுடன் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
- 3
கொதிக்க வைத்த தண்ணீரை மாவுடன் சேர்த்து ஒரு கரண்டியால் விரவி கொள்ளவும்.
- 4
கொதிக்க வைத்த தண்ணீரை மாவுடன் சேர்த்து ஒரு கரண்டியால் கிளறி கொள்ளவும்.
- 5
மாவு கை பொறுக்கும் சுட்டிருக்கு வந்த உடன் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
- 6
மாவை இடியாப்ப குழலில் வைத்து இட்லி தட்டில் பிழித்துக்கொள்ளவும்.ஐந்து முதல் பத்து நிமிடங்கள் இட்லி பானையில் வேக வைத்து எடுக்கவும்.
- 7
சுவையான ராகி இடியப்பம் தயார்.இதை தேங்காய் மற்றும் நாட்டு சக்கரை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்