இட்லி சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து கொள்ளவும். அதில் துவரம்பருப்பு சேர்த்து தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளியை சேர்த்து வதங்கியதும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
- 3
காய்கறிகள் வதங்கியதும், சிறிது தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேகவைக்கவும். அதில் மிளகாய் தூள், சாம்பார் பொடி, தனியாத்தூள், மல்லித்தூள் சேர்த்து வேகவிடவும்
- 4
வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 5
புளிக்கரைசல் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க விடவும்.காய்கறிகள் நன்கு வேகவிடவும்.
- 6
வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14925185






















கமெண்ட் (2)