வெஜிடபிள் குருமா
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும். ஒரு ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, சோம்பு, கசகசா, முந்திரி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
தக்காளியை சேர்த்து வதக்கவும்.பிறகு அதில் காய்களை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 4
தனியாக மிக்சியில் தேங்காய்,பொட்டு கடலை, கசகசா, முந்திரி பருப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்தும் மல்லி இலை தூவி பரிமாறவும். - 5
நன்கு கொதித்ததும் மல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான வெஜ் குருமா தயார்..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14958635



















கமெண்ட்