சோலே மசால்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு, இஞ்சி பூண்டு சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
சிறிது தண்ணீர் விட்டு பச்சை வாசனை போக வதக்கி அரைத்து கொள்ளவும்.
- 3
அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கி, அரைத்த விழுதை சேர்க்கவும்.
- 4
கொண்டகடலையை ஒரு நாள் முன்னாடியே ஊறவைத்து, மறுநாள் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
- 5
பின் கொண்டக்கடலையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.உப்பு சேர்த்து கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
- 6
சுவையான சோலே மசால் ரெடி..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14960837




















கமெண்ட் (2)