சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருளை எடுத்துக்கொண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொண்டு, நான்கு பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொண்டு, அரை மூடி தேங்காய் துருவலை எடுத்துக்கொண்டு ஒரு மிக்சி ஜாரில் அரை டம்ளர் தண்ணி ஊற்றி அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தில் 150 கிராம் நெய் ஊற்றவும். தாளிக்க 2 பட்டை, 2 பிரிஞ்சி இலை, 2 ஏலக்காய், 4 கிராம்பு, 1 ஸ்டார் பூ.
- 2
நெய் காய்ந்தவுடன் தாளிக்கவும் பின் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
- 3
அதோடு பச்சை மிளகாய், வெங்காயம், சேர்த்து 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
பின் 6 முந்திரியை பொடியாக உடைத்துக் அதில் சேர்த்து வதக்கவும்.1/2 கிலோ பாசுமதி அரிசிக்கு ஐந்து டம்ளர் வீதம் தண்ணீர் ஊற்றவும். தேங்காய் பால் 3 டம்ளர், 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் உப்பு சேர்க்கவும்.
- 5
அரை கப் தயிர் சேர்த்து அரை கிலோ பாசுமதி அரிசி நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்துக்கொண்டு அதில் சேர்த்து கிண்டவும். அடுப்பை குறைவான தீயில் வைத்து வேகவிடவும்.
- 6
மற்றொரு அடுப்பில் தோசைக்கல் வைத்து காய்ந்த உடன் பாத்திரத்தை அதற்கு மேல் வைத்து ஒரு துணியால் வேடுகட்டி மூடி காற்று புகாமல் வேக விடவும்.25 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். மேலோட்டமாக சாதத்தைக் கிளறி விட்டு ஒரு பிளேட்டில் பரிமாறவும்.
- 7
சுவையான ருசியான தம் நெய் புலாவ் ரெடி.🌼🌼🌼
Similar Recipes
More Recipes






















கமெண்ட் (2)