மொறு மொறு எக் பிங்கர்(egg finger recipe in tamil)

பொதுவாக குழந்தைகளுக்கு முட்டை மிகவும் பிடிக்கும். மேலும் இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்னாக்ஸ் ஆகும்.

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அளவு முட்டைகளை ஒரு பவுலில் உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
- 2
அதில் மிளகுத்தூள், சில்லி ஃபிளக்ஸ் மற்றும் பொடியாக நறுக்கி வெங்காயம், கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
- 3
இந்தக் கலவையை ஒரு அலுமினியடின்னில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- 4
வேக வைத்த முட்டையை ஃபிங்கர் வடிவில் துண்டுகளாகவும்.
- 5
ஒரு பவுலில் மைதா சோள மாவு மிளகுத்தூள் சில்லி ஃப்ளேக்ஸ் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும். கான்ப்ளேக்ஸ் பொடித்து ரெடி பண்ணி வைக்கணும். அதில் உப்பு சில்லி ஃபிலிம்ஸ் சேர்த்து கலக்கவும்.
- 6
எக் பிங்கரை மைதா கலவையில் இட்டு, கான்ப்ளக்ஸ் பொடியில் பிரட்டி எடுத்து வைக்கவும்.
- 7
இதனை மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்து எடுத்தால் அருமையான சுவையான மொறு மொறு எக் பிங்கர் தயார் 😋😋😋
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (6)