அதிரசம்(athirasam recipe in tamil)

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது புத்தாடை, இனிப்பும், பட்டாசும் தான். அதிலும் இனிப்புகள் வெளியில் வாங்குவதை விட வீட்டில் செய்யும் இனிப்புகள் தனி சிறப்பு! அந்த வகையில் வீட்டில் எளிமையாக செய்யக்கூடிய அதிரசம் செய்முறை பற்றி பார்க்கலாம். #DE

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சரிசியை முதல் நாளே இரண்டு மூன்று முறை நன்கு கழுவி சுத்தமான நீரில் நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 2
நான்கு மணி நேரம் கழித்து அதில் உள்ள நீரை வடிகட்டி துளி ஈரம் இல்லாமல் நீரை வடிய வைக்க வேண்டும்.
- 3
பின் மிக்ஸியில் / அரவை மிஷினில் நன்கு மாவாக அரைத்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
பின் ஒரு கடாயில் மண்டவெல்லத்தை பொடி செய்து போட்டு அரை டம்ளர் நீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும்.
- 5
பாகு காய்ச்சியவுடன் அதை மாவுடன் சேர்த்து ஏலக்காய் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி ஒரு நாள் இரவு முழுவதும் மூடி அப்படியே வைக்க வேண்டும். (மறுநாள் மாவு மிகவும் இலக்கமாக இருந்தால் பிரிட்ஜ் ல் சிறிது நேரம் வைக்கலாம். மாவு கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்க்கலாம்)
- 6
மறுநாள் ஒரு கடாயில் எண்ணெய் சுட வைத்து, ஒரு சிறிய வாழை இலையில் எண்ணெய் தடவி அதில் மாவை வைத்து தட்டையாக எடுத்து எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான அதிரசம் ரெடி!!
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்