மொறு மொறு ஆரிய தோசை(crispy dosa recipe in tamil)

சாதாரணமாக ராகி மாவில் அரிசி மாவு கலந்து செய்யும் ராகி தோசையை விட முழுதாகியை ஊற வைத்து ராகி தோசைக்கு ஆட்டினால் மிகவும் மொறுமொறுப்பாக வரும்.
மொறு மொறு ஆரிய தோசை(crispy dosa recipe in tamil)
சாதாரணமாக ராகி மாவில் அரிசி மாவு கலந்து செய்யும் ராகி தோசையை விட முழுதாகியை ஊற வைத்து ராகி தோசைக்கு ஆட்டினால் மிகவும் மொறுமொறுப்பாக வரும்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியையும் முழு ராகியையும் கழுவி ஆறு மணி நேரம் ஒன்றாக ஊற வைக்கவும். பிறகு தனியாக அரை டம்ளர் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து அதே ஊறவைத்த அரிசியில் அரைப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக ஊற வைக்கவும். பிறகு பெரிய ஜார் மிக்ஸி அல்லது கிரைண்டரில் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து பத்து மணி நேரம் வரை புளிக்க விடவும். மாவை தோசை பதத்திற்கு தகுந்தார் போல் கரைத்துக் கொள்ளவும். கெட்டியாக இருந்தாலும் நன்றாக தேய்க்க வரும்.
- 2
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடு ஏற்றவும். மாவை கரண்டி கொண்டு நன்கு கலந்து விட்டுக் கொள்ளவும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு சூடான கல்லில் மாவை ஊற்றி கரண்டியில் பரவலாக மெலிதாக ஊற்றவும். உள்பக்கம் ஆயில் தேவையான அளவு சுற்றி விடவும். உள்பக்கம் வெந்த பிறகு திருப்பி போட்டு மறுபக்கம் நெய் தேவையான அளவு விட்டுக் கொள்ளவும். சாதா தோசை ஊற்றுவதை விட இந்த தோசை மிகவும் மொறுமொறுப்பாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும்.
Similar Recipes
More Recipes








கமெண்ட்