கேப்பை ரொட்டி(ragi roti recipe in tamil)

சிறு தானியங்களில் மிக முக்கியம் வாய்ந்தது கேப்பை. மிக எளிதாக கிடைக்கும் தானிய வகை. இதில் உள்ள சத்துக்கள் ஏராளம். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணும் உணவாக கேப்பை உள்ளது. கேப்பை கொண்டு பல வித உணவுகள் செய்யலாம். அதில் மாலை நேர உணவாக செய்யக் கூடிய கேப்பை ரொட்டி செய்முறை பற்றி பார்க்கலாம். #ku

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேப்பை மாவை நன்றாக சலித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
- 2
பின் அதில் தண்ணீர் ஊற்றி அதிரசம் மாவு பததிற்கு பிசைய வேண்டும்.
- 3
பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கட்டி இல்லாமல் பிசைய வேண்டும்.
- 4
இக்கலவையை கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 5
பின் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு ஏறியவுடன் கேப்பை மாவு கலவையை எடுத்து அதை தட்டையாக்கி தோசை கல்லில் போட்டு சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
- 6
ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும்.
- 7
இப்போது சுவையான கேப்பை ரொட்டி தயார்! இதை மாலை வேளையில் காபி, டீயுடன் சேர்த்து உண்ணலாம்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்