சமையல் குறிப்புகள்
- 1
ஒரு நாள் முன்பு பட்டாணியை ஊற வைக்கவும்
- 2
ஊற வைத்த பட்டாணியை ஐந்து விசில் விட்டு குக்கரில் வைத்து எடுக்கவும்
- 3
வெந்த பட்டாணியை பாதியாகப் பிரித்து ஒரு பங்கை வசித்து கொள்ளவும் மசித்து கொள்ளவும்
- 4
அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி கருவேப்பிலை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 5
அதனுடன் வேக வைக்க சிறு உப்பு மஞ்சள் கறி மசாலா மிளகாய் தூள் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும் பட்டாணி வேக வைத்த தண்ணீரை ஊற்று காய்கள் வெந்து சுண்டி வரும் வரை வேக வைக்கவும்
- 6
வெங்காயம் தக்காளி வந்தவுடன் முழு பட்டாணியை சேர்க்கவும்
- 7
பட்டாணியை சேர்த்து கிளறியவுடன் மசித்து வைத்திருந்த பட்டாணியும் சேர்க்கவும்
- 8
பிறகு தண்ணீர் தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு சேர்க்கவும் இந்த மசாலாவுக்கு தேவையான உப்பை சேர்க்கவும்.
- 9
ஒரு கிண்ணத்தில் அரை கப் வெங்காயம் ஒரு தக்காளி கொத்தமல்லி இலை எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 10
பரிமாறும் தட்டில் மசாலா சுண்டல் வெங்காயம் தக்காளி கலவை காராபூந்தி அல்லது கான்ஃப்ளக்ஸ் சேர்த்து பரிமாறவும் இதன் மேல் புதினா சட்னி தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது சுவையான மசாலா சுண்டல் ரெடி.
- 11
அடுத்த ரிப்பில் சந்திக்கலாம். தொடர்ந்து படித்தமைக்கு நன்றி...🙏
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்