உளுத்தம்பருப்பு சாதம், எள்ளு துவையல்

திருநெல்வேலி மாவட்டத்தின் மிக பிரசித்தி பெற்ற மதிய உணவு இது. இத்துடன் வெண்டைக்காய் பச்சடியும் பரிமாறப்படும். இந்த உணவை செய்வதற்கு சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதத்தில் உடலுக்கு நன்மை பயக்க வல்லது. மாதம் இருமுறையாவது கண்டிப்பாக இதை இங்கு செய்வது வழக்கம்.

சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் வெந்தயத்தை பொன்னிறத்தில் வறுத்து எடுத்து வைக்கவும். அதே வாணலியில் உளுத்தம் பருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.
- 2
அரிசியை களைந்து, அத்துடன் உளுத்தம் பருப்பு வெந்தயம், பூண்டு தேங்காய் துருவல், கருப்பட்டி, தேவையான உப்பு சேர்த்து 7 கப் தண்ணீர் ஊற்றி ப்ரெஷர் குக்கரில் நான்கு விசில் வைத்து இறக்கவும்.
- 3
எள்ளு துவையல் செய்யும் முறை:
- 4
வெறும் வாணலியில் எள்ளை படபடவென்று வெடிக்குமாறு வறுத்து எடுக்கவும்.
- 5
பின் வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும்.
- 6
மிக்சி ஜாரில் தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து அரைக்கவும். சிறிது நீர் தெளித்து அரைக்கவும். கடைசியில் வறுத்த எல்லை சேர்த்து அரைக்கவும். அரைத்த துவையலில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கலந்து வைக்கவும்.
- 7
சூடான உளுத்தம்பருப்பு சாதத்தில் இந்த துவையலை சேர்த்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாபிட்டால் மிக அருமையாக இருக்கும்.
- 8
இதற்கு தொட்டுக்கொள்ள வெண்டைக்காய் பச்சடி செய்வது வழக்கம்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்