சிறுபயறு பலூடா
ருசியான ஜில் சிறுபயறு பலூடா..
சமையல் குறிப்புகள்
- 1
சிறுபயறைத் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்றாக வேக விடவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியைச் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரையும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டவும்.
- 3
நூடுல்ஸைத் தனியாகப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, வடிகட்டி, பைப் தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.
- 4
ஒரு பவுலில் சப்ஜா விதைகளை 15 நிமிடங்கள் ஊற விடவும்.
- 5
ஒரு பவுலில் வெந்த சிறுபயறு, மற்றும் தேவைக்கு வடிகட்டிய கருப்பட்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 6
தேங்காய்ப்பாலில் சீனி சேர்த்து கலந்து கொள்ளவும். முந்திரியைச் சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
- 7
லேயரிங் செய்ய: பெரிய, 1/2 மணி நேரம் பிரிட்ஜில் வைத்த கிளாஸ்களில், முதலில் சிறிது பயறு கருப்பட்டி, பின் நூடுல்ஸ், தேங்காய்ப்பால், மில்க்மெய்ட், வடிகட்டிய சப்ஜா விதைகள், முந்திரி என வரிசையாக சேர்க்கவும். இதே மாதிரி மீண்டும் ஒரு முறை செய்யவும். தேவைப்பட்டால் சிறிது நேரம் பிரிட்ஜில் வைக்கவும். இறுதியாகப் பரிமாறும்போது, ஒரு ஸ்கூப் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து, மேலே சிறிது பயறு கருப்பட்டி வைத்து, சில்லாகப் பரிமாறவும்.
- 8
சூப்பரான ஆரோக்கியமான பலூடா தயார்.
Similar Recipes
More Recipes




கமெண்ட்