சில்லி இட்லி (Chilli idli recipe in tamil)
#leftover...
குழந்தைகளுக்கு எல்லா நேரத்திலும் பிடித்தது.. எளிதான மற்றும் ஆரோக்கியமான சுவையான சிற்றுண்டி .
சில்லி இட்லி (Chilli idli recipe in tamil)
#leftover...
குழந்தைகளுக்கு எல்லா நேரத்திலும் பிடித்தது.. எளிதான மற்றும் ஆரோக்கியமான சுவையான சிற்றுண்டி .
சமையல் குறிப்புகள்
- 1
இட்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், குடைமிளகாய்,பச்சை மிளகாய், இவற்றை நறுக்கிக்கொள்ளவும். இரண்டு பல் பூண்டு சிறிது இஞ்சி இடித்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இட்லி துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 3
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி இடித்த இஞ்சி பூண்டை சேர்க்கவும். வதங்கியவுடன் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், குடை மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு ஒரு ஸ்பூன் காஷ்மீரி சில்லி, 2ஸ்பூன் டொமேட்டோ சாஸ்,தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
பொரித்த இட்லி துண்டுகளை இவற்றுடன் சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும். சுவையான சில்லி இட்லி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்