சப்பாத்தி வெஜ் ரோல்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவு சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
இதை 30 நிமிடங்கள் தனியாக வைக்க வேண்டும்.
- 4
அடுப்பில் எண்ணெய் சூடு செய்து சீரகம் போட வேண்டும்.
- 5
சீரகம் வெடித்ததும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
- 6
வெங்காயம் வதங்கியவுடன் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும். அதான் வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
- 7
வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- 8
வதங்கியவுடன் அவற்றில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு, சர்க்கரை சேர்க்க வேண்டும்.
- 9
நன்றாக வதங்கியவுடன் தோல் உரித்த உருளைக்கிழங்கை நீள வாக்கில் வெட்டி, காரட்டை நீள் வாக்கில் வெட்டி இரண்டையும் போட வேண்டும். இதனுடன் புதினா சேர்க்க வேண்டும்.
- 10
நன்றாக கலந்து 5 முதல் 7 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
- 11
இப்போது மசாலா ரெடி!
- 12
பிசைந்து வைத்த கோதுமை மாவை உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவ மாக தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 13
தோசை கல்லை சுட வைத்து தேய்த்த மாவை போட்டு அதான் மேல் நெய் தடவ வேண்டும். வெந்தவுடன் புரட்டிப் போட்டு மறுபக்கம் வேக வைக்க வேண்டும்.
- 14
சப்பாத்தியை தனியாக எடுத்து வைத்து அதான் மேல் தக்காளி சாஸை பரப்பி விட வேண்டும். அதன் மேல் மசாலா கலவையை நடுவில் வைத்து கீழ் புறம் மடித்து, மற்ற இரு பக்கங்களிலும் மடிக்க வேண்டும்.
- 15
இப்போது சப்பாத்தி ரோல் ரெடி!
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்