கடாய் காளான் மசாலா(kadai mushroom gravy)

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497

கடாய் காளான் மசாலா(kadai mushroom gravy)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  1. காளான் 250 கிராம்
  2. குடைமிளகாய் ஒன்னு
  3. பெரிய வெங்காயம்-2
  4. தக்காளி-2
  5. பச்சை மிளகாய் ரெண்டு
  6. மிளகாய்த்தூள் மல்லித்தூள் ஒரு ஸ்பூன்
  7. தேங்காய் பல் 4
  8. சோம்பு, சீரகம், கசகசா, மிளகு, கடுகு உளுத்தம்பருப்பு, அனைத்தும் ஒவ்வொரு ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. இஞ்சி ஒரு துண்டு, பூண்டுப்பல் 3

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு சோம்பு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும், கடுகு சோம்பு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் வதங்கியவுடன், இரண்டு தக்காளியை நறுக்கி அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும், பின் 2 பச்சை மிளகாய் சேர்க்கவும்.

  3. 3

    வதங்கியவுடன் குடை மிளகாயையும் நறுக்கி அதனுடன் சேர்க்கவும், சிறிதுநேரம் வதங்கியபின் 250 கிராம் காளானை சேர்க்கவும்.

  4. 4

    அதனுடன் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது வேக விடவும், சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் காளானை வேகவிடவும்.

  5. 5

    பின் மிக்ஸி ஜாரில் நான்கு பல் தேங்காய் அரை ஸ்பூன் சோம்பு, மிளகு சீரகம் கசகசா இவற்றை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.

  6. 6

    அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  7. 7

    கிரேவி பதத்துக்கு வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

  8. 8

    சப்பாத்தி, தோசை, பரோட்டா, இவற்றிற்கு சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497
அன்று

Similar Recipes