பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரைக் கப் சர்க்கரையை மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பட்டரை உருக்கி அதனுடன் சர்க்கரை பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 2
கலக்கிய பின்பு ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும், இதனுடன் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
- 3
இதை இரண்டு பாதியாக பிரித்து ஒரு பாதியில் கொக்கோ பவுடர் சேர்த்து பிசையவும்.
- 4
இரண்டையும் சரிசமமாக வைக்க ஒரு பாலிதீன் கவரில் வெண்ணை தடவி அதில் மாவை வைத்து நீளவாக்கில் மடிக்கவும்.
- 5
இதை 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
- 6
பிரிட்ஜில் இருந்து எடுத்த பிறகு அதை இரண்டு பங்காக வெட்டி ஒன்றன் மேல் ஒன்று அடக்கி அதை சதுர வாக்கில் வெட்டவும்.
- 7
ஒரு தட்டில் நெய் தடவி அதில் வெட்டிய பிஸ்கட் துண்டுகளை அடுக்கி 20 நிமிடம் பேக் செய்யவும்.
- 8
சூப்பரான டபுள் கலர் குக்கி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13404634











கமெண்ட் (3)