🍊 அசத்தல் அரஞ்சு கேக் 🍰
சமையல் குறிப்புகள்
- 1
மைதா, உப்பு, பேகிங் பவுடர் மூன்றையும் சலித்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு அகன்ற பாத்திரத்தில் முட்டை சேர்த்து ஓரு நிமிடம் வரை நன்றாக பீட்டரால் கலக்கவும்.
- 3
அதனுடன் சர்க்கரை, வெண்ணிலா மற்றும் ஆரஞ்சு எஸன்ஸ் சேர்த்து நுரை பொங்கி வரும் வரை நன்றாக கலக்கவும்
- 4
5 முதல் 7 நிமிடங்கள் வரை ஆகும்.
- 5
பிறகு துறுவிய ஆரஞ்சு தோல் மற்றும் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
- 6
அதனுடன் சலித்து வைத்த மைதா கலவையை சிறிது சிறிதாக சேர்த்து
- 7
அதனை தொடர்ந்து ஆரஞ்சு பழச்சாற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
- 8
தயார் செய்த கலவையை 8 இன்ச் வட்ட பாத்திரத்திலோ அல்லது 2 லி நீல பாத்திரத்திற்கோ மாற்றவும்.
- 9
குச்சி வைத்து கலந்து கொடுத்து, மேசை மேல் லேசாக தட்டி கொடுக்கவும்.
- 10
180• டிகிரி செல்சியசில் 15 நிமிடங்கள் முற்சூடு செய்த அவனில் 35 முதல் 40 நிமிடங்கள் வரை சுட்டெடுக்கவும்.
- 11
தயார் செய்த கேக்கை வேறு தட்டிற்கு மாற்றி நன்கு ஆற விடவும்.
- 12
ஆறிய பின் துண்டுகள் இட்டு பறிமாறவும், எளிமையான முறையில் பஞ்சு போன்ற, நறுமணமிக்க சுவையான ஆரஞ்சு பழ கேக்கை நீங்களும் செய்து அசத்துங்கள். இந்த குறிப்பை கண்டு கற்றமைக்கு மிக்க நன்றி.. 🤗💐
Keywords
Similar Recipes
More Recipes
- இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
- டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil)
- ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)
- கொண்டைக்கடலை ராஜ்மா குருமா (Kondaikadalai rajma kuruma recipe in tamil)
- முட்டை கோஸ் சட்னி (Muttaikosh chutney recipe in tamil)


































கமெண்ட் (4)