டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilk
காபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்
டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilk
காபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் டல்கோனா கிரீம் செய்வதற்கு சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடித்து பிறகு அதனுடன் காபி பவுடரையும் தண்ணீரையும் கலந்து நன்றாக அடிக்கவும் எலக்ட்ரிக் பீட்டர் அல்லது கையில் அடிக்கலாம். நல்ல க்ரீம் போன்ற பதத்தில் வரும் வரை அடிக்கவும்
- 2
நாம் புடிங் தயார் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய் தடவி வைக்கவும்
- 3
மிக்ஸி ஜாரில் பால் முட்டை சர்க்கரை மற்றும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் க்ரீமை சேர்த்து நன்றாக அடிக்கவும். நன்றாக நுரைத்து வந்திருக்கும் இப்போது நம்முடைய கலவை தயார்
- 4
நாம் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்திருக்கும் கிண்ணத்தில் ஊற்றி அதை குக்கரில் வைத்து, தட்டுப் போட்டு மூடி வைத்து மூன்று விசில் விடவும்
- 5
விசில் அடங்கியவுடன் ஒரு கத்தியை உள்ளே விட்டு ஒட்டு கிறதா என்பதைப் பார்க்கவும். ஒட்டாமல் வரும் வரை வேக வைக்கவும்
- 6
நம்முடைய மெதுவான மற்றும் சுவையான காபி புடிங் தயார்.காபி பிரியர்களுக்கு கண்டிப்பாக மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி. இதை எனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு உள்ளேன்
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்