ரெயின்போ கேக் (எக்லெஸ்) (Rainbow cake recipe in tamil)

#trending
குழந்தைகளுக்கு கேக் வகைகள் என்றால் மிகவும் விருப்பம். வண்ணமயமான கேக் என்றால் கொள்ளைப் பிரியம். நாம் வீட்டிலேயே சுலபமாக ஓவன் இல்லாமல் இந்த ரெயின்போ கேக் செய்யலாம். கண்ணைக் கவரும் ரெயின்போ கேக் உங்கள் குழந்தைக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள்.

சமையல் குறிப்புகள்
- 1
தயிர், எண்ணெய், சீனி முதலியவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு ஒரு நிமிடம் அரைத்து எடுக்கவும்.
- 2
மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து இரண்டு முறை நன்கு சலிக்கவும். கேக் ட்ரேயை வெண்ணெய் தடவி மைதா தூவி தயாராக வைக்கவும்.
- 3
மிக்சியில் அரைத்த தயிர், சீனி, எண்ணெய் கலவையை ஒரு பவுலில் ஊற்றி அதில் மைதா கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
கலந்து வைத்துள்ள கேக் கலவையை சம அளவு எடுத்து விரும்பிய வண்ணங்கள் கலந்து வைக்கவும். கேக் கலவையை கேக் ட்ரேயில் ஒவ்வொரு வண்ணமாக ஊற்றவும்.
- 5
பல் குத்தும் குச்சியால் கோடுகள் வரையவும். பிரஷர் குக்கர் அல்லது பேனை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி வைக்கவும்.
- 6
பத்து நிமிடங்கள் மீடியம் சூட்டில் சூடு பண்ணவும். பின்னர் கேக் ட்ரேயை உள்ளே வைத்து மூடி வைக்கவும். நாற்பது முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் பேக் செய்யவும்.
- 7
கேக் நன்கு ஆறிய பிறகு வெட்டித் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (7)