ஸ்வீட் கார்ன் சப்ஜி (Sweet corn sabzi recipe in tamil)

Week 8
ஸ்வீட் கார்ன் சப்ஜி (Sweet corn sabzi recipe in tamil)
Week 8
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
சப்ஜி செய்யும் பொழுதே பக்கத்து அடுப்பில் charcoal ஒன்றை வைத்து ஆன் பண்ணவும்
- 4
இஞ்சி பூண்டு விழுது நன்றாக வாசனை போனபின்பு அதனுடன் தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்.
- 5
பின்பு மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்
- 6
பின்பு எல்லா பொடி வகைகளையும் சேர்க்கவும். மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், தனியாத்தூள்,கரம் மசாலா தூள்,சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்
- 7
நன்றாக வதங்கிய பின்பு வேகவைத்த ஸ்வீட் கார்ன் சேர்க்கவும்
- 8
தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 9
இதனுடன் முந்திரி தர்பூசணி விதை அரைத்த விழுது, கோவா, துருவிய பனீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 10
பின்பு ஒரு சிறிய கோஸ் இலையை எடுத்து கிரேவியில் நடுவில் வைக்கவும்
- 11
Charcoal ஐ எடுத்து முட்டைக்கோஸ் இலையின் மீது வைக்கவும்.
- 12
Charcoal ஐ வைத்த உடனே அதன் மீது ஒரு ஸ்பூன் நெய் விடவும். உடனே ஒரு தட்டை போட்டு மூடி விடவும்.
- 13
ஒரு நிமிடம் கழித்து மூடியை திறந்து சார்கோல் மற்றும் கோஸ் இலையை எடுத்து விடவும்
- 14
பின்பு கஸ்தூரி மேத்தி,துருவிய சீஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 15
கடைசியாக மல்லி இலை தூவி பரிமாறவும்
- 16
குறிப்பு :உங்களுக்கு விருப்பம் என்றால் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம் நான் சேர்க்கவில்லை.
- 17
ரொட்டி மற்றும் நான் புல்கா இவைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த ஸ்வீட் கார்ன் சப்ஜி
Keywords
Similar Recipes
More Recipes






























கமெண்ட்