இன்ஸ்டன்ட் ஹஜெல்நட் சாக்லேட் பாசுந்தி (Instant hazelnut chocolate basundi recipe in tamil)

#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் மில்க் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் வாங்க செய்முறையை காணலாம்.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் பால் பவுடரையும் காய்ச்சிய பாலையும் சேர்த்து நன்கு கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறி விடவும். நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- 3
சிறிது நேரத்திற்கெல்லாம் கெட்டியாக ஆரம்பிக்கும் அப்பொழுது நாட்டு சர்க்கரையை சேர்க்கவும்.
- 4
நாட்டு சக்கரை இது ஆர்கானிக் நட்டு சக்கரை சேர்த்தவுடன் நன்கு கரைத்துக் கொள்ளவும் அடிப்பிடிக்காமல் கிளறி விடவும்.
- 5
இப்பொழுது ஹஜெல்நட் சாக்லேட்டை உடைத்து போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 6
சிறிது நேரத்திற்கெல்லாம் எல்லாம் நன்கு கலந்து கிரீமி கன்சிஸ்டன்ஸி வந்தவுடன் ஸ்டவ்வை ஆஃப் செய்ய வேண்டும்.
- 7
இப்பொழுது சுவையான மற்றும் ஹெல்தியான இன்ஸ்டன்ட் ஹஜெல்நட் சாக்லேட் பாசுந்தி அவர் ஆகிவிட்டது.ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்'லென்று பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நன்றி.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்