முலாம்பழம் ஐஸ் கிரீம்(Muskmelon ice cream recipe in tamil)
#CookpadTurns4
முலாம்பழம் அல்லது கிர்ணிப்பழம் வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஐஸ்கிரீம் செய்முறையை பார்க்கலாம்
முலாம்பழம் ஐஸ் கிரீம்(Muskmelon ice cream recipe in tamil)
#CookpadTurns4
முலாம்பழம் அல்லது கிர்ணிப்பழம் வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஐஸ்கிரீம் செய்முறையை பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் பாலை நன்றாக காய்ச்சி பாதியாக வரும் வரை காய்ச்சி நன்றாக ஆற வைக்கவும். முலாம் பழத்தையும் சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
மிக்ஸி ஜாரில் வெட்டி வைத்திருக்கும் ஒரு கப் முலாம்பழத்தை போட்டு அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும் சிறிது சிறிதாக தேவைப்பட்டால் பாலை சேர்த்து கட்டி இல்லாமல் அரைக்கவும்
- 3
படத்தில் காட்டியுள்ளது போல கட்டிகள் இல்லாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும் இதனை ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் ஊற்றி 4 முதல் 5 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்
- 4
5 மணிநேரம் கழித்து அதனை எடுத்து மீண்டும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பின்னர் அதே காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு மீண்டும் 4 முதல் 5 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்
- 5
அதேபோல் இரண்டு முதல் மூன்று முறை எடுத்து அரைத்து மீண்டும் அதே பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும் கடைசி வரைக்கும் போது நமக்கு பிடித்தமான பிஸ்தாவை தூவி வைக்கவும்
- 6
நல்ல சுவையான மற்றும் ஆரோக்கியமான முலாம்பழம் ஐஸ்க்ரீம் தயார்.
- 7
க்ரிமியான ஐஸ் கிரீம் வீட்டிலேயே தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனை என்னுடைய யூடியூப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளேன்
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்