வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு, உப்பு,ஒரு ஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு தண்ணீர்,சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு செய்து கொள்ளவும்,.....
- 2
நான்கு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும், அதனை சப்பாத்தி கல்லில் மெல்லிசாக தேய்த்து, ஸ்கொயர் வடிவில் கத்தி வைத்து, வெட்டிக்கொள்ளவும்,...
- 3
ஒரு ஸ்கொயர் வடிவம் துண்டை எடுத்து, எதிர்ப்பக்கத்தில் சேர்த்து கையால் அமுக்கி விடவும்,... பின் அதன் ஆப்போசிட் பக்கத்தையும், சேர்த்து அமுக்கி விடவும்,...
- 4
இது போல் எல்லா மாவையும் செய்து கொள்ளவும்,....
- 5
ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் எண்ணெய், சேர்த்து கொதி வரும் பொழுது, பாஸ்தாவை உள்ளே சேர்த்து,ஐந்து நிமிடம் வேக வைக்கவும்,....பாஸ்தா வெந்ததும் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்,....
- 6
ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள், மல்லித்தூள்,கரம் மசாலா, மஞ்சள் தூள்,சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்,...
- 7
கடாயில் எண்ணெய் ஊற்றி,நறுக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,சேர்த்து வதக்கவும், வதங்கியவுடன் தக்காளி, சேர்த்து வதக்கவும், கலந்து வைத்துள்ள மசாலா சேர்த்து வதக்கவும்,.....
- 8
அதனுடன்வேக வைத்துள்ள பாஸ்தா, சேர்த்து கிளறி இறக்கவும்,...(உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்)
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- சிகப்பு கவுணி அரிசி புட்டு (Sikappu kavuni arisi puttu recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- முடக்கொத்தான் கீரை தோசை 🍥🍥(Mudakkathan keerai dosai recipe in tamil)
- சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
- ஜாகோ கேரட் ஸ்வீட் (Sago carrot sweet recipe in tamil)






















கமெண்ட் (2)