வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப் கோதுமை மாவு
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 2ஸ்பூன் டொமேட்டோ கெட்சப்
  6. 1ஸ்பூன்1ஸ்பூன் சோயா சாஸ்
  7. 1ஸ்பூன்மிளகாய்த்தூள்
  8. 1/4ஸ்பூன் கரம் மசாலா
  9. 1/4ஸ்பூன் மல்லித்தூள்
  10. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 3டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  12. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவு, உப்பு,ஒரு ஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு தண்ணீர்,சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு செய்து கொள்ளவும்,.....

  2. 2

    நான்கு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும், அதனை சப்பாத்தி கல்லில் மெல்லிசாக தேய்த்து, ஸ்கொயர் வடிவில் கத்தி வைத்து, வெட்டிக்கொள்ளவும்,...

  3. 3

    ஒரு ஸ்கொயர் வடிவம் துண்டை எடுத்து, எதிர்ப்பக்கத்தில் சேர்த்து கையால் அமுக்கி விடவும்,... பின் அதன் ஆப்போசிட் பக்கத்தையும், சேர்த்து அமுக்கி விடவும்,...

  4. 4

    இது போல் எல்லா மாவையும் செய்து கொள்ளவும்,....

  5. 5

    ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் எண்ணெய், சேர்த்து கொதி வரும் பொழுது, பாஸ்தாவை உள்ளே சேர்த்து,ஐந்து நிமிடம் வேக வைக்கவும்,....பாஸ்தா வெந்ததும் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்,....

  6. 6

    ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள், மல்லித்தூள்,கரம் மசாலா, மஞ்சள் தூள்,சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்,...

  7. 7

    கடாயில் எண்ணெய் ஊற்றி,நறுக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,சேர்த்து வதக்கவும், வதங்கியவுடன் தக்காளி, சேர்த்து வதக்கவும், கலந்து வைத்துள்ள மசாலா சேர்த்து வதக்கவும்,.....

  8. 8

    அதனுடன்வேக வைத்துள்ள பாஸ்தா, சேர்த்து கிளறி இறக்கவும்,...(உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes