கறிவேப்பிலை மிளகு சிக்கன் (Karuveppilai milaku chicken recipe in tamil)

கறிவேப்பிலை மிளகு சிக்கன் (Karuveppilai milaku chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி விட்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,அரை டீ ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்றாக புரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
கடாய் அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சோம்பு, கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து கறிவேப்பிலை கிறிஸ்ப்பியாக வரும் அளவிற்கு ஃப்ரை பண்ணி எடுத்து ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை மாறும் வரை வதக்கவும்.
- 4
இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளியைப் சேர்த்து தக்காளி மசிந்து வரும் வரை வதக்கவும்.
- 5
பின்னர் இதில் மல்லித் தூள்,ஜீரகத் தூள்,1 டீ ஸ்பூன் மிளகு தூள், கரம் மசாலா தூள் இவற்றை சேர்த்து அடுப்பில் தீயை குறைத்து வைத்து பச்சை வாசனை மாறும் வரை வதக்கவும்
- 6
பின்னர் இதில் மசாலா புரட்டி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக புரட்டி கொடுக்கவும்.
- 7
இப்போது ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி கொடுத்து அளவான தீயில் பத்து நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
- 8
சிக்கன் நன்றாக வெந்ததும் வறுத்து வைத்திருக்கும் சோம்பு கறிவேப்பிலையுடன் இரண்டு டீஸ்பூன் மிளகுத் தூளும சேர்த்து கை கொண்டு நன்றாக பொடித்து சிக்கனில் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி புரட்டி அளவான தீயில் இரண்டு நிமிடம் கைவிடாமல் நன்றாக கலந்து விடவும்.
- 9
சிக்கனில் உள்ள தண்ணீர் வற்றி ட்ரை ஆகி வரும் போது இறக்கவும்
- 10
அருமையான சுவையில் மணக்க மணக்க கறிவேப்பிலை மிளகு சிக்கன் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட்