கொள்ளு சட்னி (Kollu chutney recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#jan1
இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி கொள்ளுவில் உள்ளது. இதில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. குளிர் காலத்திற்கு ஏற்றது.

கொள்ளு சட்னி (Kollu chutney recipe in tamil)

#jan1
இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கேற்ப உடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி கொள்ளுவில் உள்ளது. இதில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. குளிர் காலத்திற்கு ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. 1கப் வெந்த கொள்ளு பருப்பு
  2. 4பல் பூண்டு
  3. 6சின்ன வெங்காயம்
  4. உப்பு
  5. வறுத்து அரைக்க:
  6. 2டீஸபூன் ஆயில்
  7. 1டீஸ்பூன் தனியா
  8. 1/2 டீஸ்பூன் சீரகம்
  9. 3வரமிளகாய்

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    1 கப் வெந்த கொள்ளு பருப்பை எடுத்து வைக்கவும். 4பல் பூண்டு, 6 சின்ன வெங்காயம் தோல் நீக்கி கழுவி எடுத்து வைக்கவும். வரமிளகாய் 3 எடுத்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1 டீஸ்பூன் தனியா,1/2 டீஸ்பூன் சீரகம் தாளித்து விடவும்.

  3. 3

    அதனுடன் எடுத்துவைத்த 4 பல் பூண்டு, 6 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விடவும். 3 வரமிளகாய் சேர்த்து விடவும். வெந்த கொள்ளு பருப்பு, உப்பு சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

  4. 4

    வதக்கியதை நன்கு ஆறவிடவும். ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து விடவும்.

  5. 5

    அரைத்த விழுதை 1 கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். சுவையான கொள்ளு பருப்பு சட்னி ரெடி😄😄 சூடான சாதத்திற்கு ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes