மாமியார் கற்றுக் கொடுத்த லட்டு

அன்பு, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையான வாழும் கடவுள் "அம்மா" - எனக்கு இன்னொரு இடத்திலும் பெற முடிந்தது "மாமி"
இந்த இனிய மகளிர் தினத்தில் இனிப்பான லட்டை என் மாமிக்கு சமர்ப்பிக்கிறேன்
Dedicated to my mother in law

சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவில் 1 சிட்டிகை உப்பு(optional- தேவையெனில்) தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் சூடான பிறகு, மீடியம் ப்ளேமில் வைத்து - பூந்தி பொரிக்க வேண்டும்.
*மொறு மொறு என்று இருக்கக்கூடாது, கவனமாக இருங்கள்.
- 3
சக்கரையில் சிறிது தண்ணீர் விட்டு பாகு காய்த்து எடுத்துக் கொள்ளவும் (கம்பி பதம் வரும் வரை)
- 4
பாகில் கலர் பவுடர் (optional,தேவையெனில்),பூந்தி,ஏலக்காய், கிராம்பு,திராட்சை, பொரித்த முந்திரி சேர்த்து கிளறவும்
- 5
கை தாங்கிக் கொள்ளும் சூட்டில் சீராக லட்டு பிடித்து ஒரு தட்டில் வைக்கவும்
- 6
சிறிது சூடு குறைந்த பின்னர் இன்னொரு முறை பிடிக்கவும்.
சுவையான லட்டு தயார்
- 7
250கி கடலை மாவில் 30 முதல் 40 லட்டு வரை செய்யலாம்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)