கர்லிக் பிரட் டோஸ்ட்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூண்டை இடிக்கும் கல்லில் சேர்த்து பொடி யாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
அதன்பிறகு ஒரு பேனில் 40 கிராம் பட்டரை சேர்த்து பட்டர் உருகியதும் இடித்த பூண்டு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும். பிறகு அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதன்பிறகு ஒரு பானில் சிறிதளவு வெண்ணெய் தடவி வெண்ணெய் உருகியதும் பிரெட்டை ஒரு புறம் மட்டும் டோஸ்ட் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 4
பிறகு டோஸ்ட் செய்த பகுதி மேல் புறமாக இருக்குமாறு வைத்து அதன் மேல் வதக்கிய பூண்டையும் பட்டரையும் பிரெட்டில் தடவ வேண்டும். அதன் மேல் சிறிதளவு உப்பு தூவி விடவேண்டும். பிறகு மல்லித்தழை சிறிதளவு தூவி விடவேண்டும்.
- 5
அதன்பிறகு சீஸ்ஸை பிரெட் மீது பரப்பி வைக்க வேண்டும். பிறகு சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் மிக்ஸ்டு ஹர்ப்ஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 6
அதே பானில் சிறிதளவு பட்டர் சேர்த்து பிரட்டி எடுத்து வைத்து ஒரு மூடி வைத்து மூடி வைக்கவேண்டும். 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்க வேண்டும்.
- 7
சீஸ் அனைத்தும் உருகிய பிறகு பிரெட்டை வெளியிலெடுத்து பீட்ஸா கட்டர் வைத்து இரண்டாக கட் செய்து டொமேட்டோ கெட்சப்புடன் பரிமாறினால் சுவையான கார்லிக் ப்ரெட் டோஸ்ட் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

























கமெண்ட் (2)